Latest News

August 28, 2013

அங்கஜனின் தந்தையை கைது செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது arrest warrent for angayan's father
by admin - 0

சாவகச்சேரி பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண சபையின் வேட்பாளர் அங்கஜன் ராமநாதனின் தந்தை ராமநாதனை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் தேர்தல் வன்முறைகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே அவரை கைது செய்வதற்கான உயர் மட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, வேட்பாளர் அங்கஜன் ராமநாதனின் தந்தையை கைது செய்வதற்கான உத்தரவு தனக்கு கிடைத்துள்ளதாக யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரட்ன தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments