Latest News

July 19, 2013

வடக்கில் TNA வேட்பாளர் பங்கீட்டு விபரம்! முன்னாள் போராளிகள் இருவரை களமிறக்க முஸ்தீபு
by admin - 0

வடமாகாண சபைத்தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பானது தனது வேட்பாளர் பங்கீட்டு விபரத்தை வெளியிட்டுள்ளது. வடமாகாணத்தில் யாழ்ப்பாணத்தை தவிர கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களின் வேட்பாளர் பங்கீட்டு விபரம்…

கிளிநொச்சி =07

தமிழரசுகட்சி 3
தமிழர்விடுதலைக்கூட்டணி 2
ரெலோ 1
ஈபி.ஆர். எல். எப் 1

முல்லைத்தீவு=08

தமிழரசுகட்சி 2
ரெலோ 2
ஈபி.ஆர். எல். எப் 2
புளொட் 1
தமிழர்விடுதலைக்கூட்டணி 1

வவுனியா==09

தமிழரசுகட்சி 2
புளொட் 2
ரெலோ 2
ஈபி.ஆர். எல். எப் 3

மன்னார்==08

தமிழரசுகட்சி 2
புளொட் 1
ரெலோ 3
ஈபி.ஆர். எல். எப் 2

முன்னாள் போராளிகள் இருவரை களமிறக்க கூட்டமைப்பு முஸ்தீபு

வட மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் போராளிகள் இருவரை போட்டியிடவைப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகவும் இதுதொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

இதற்கான ஏற்பாடுகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றின் சட்டத்தணி ஒருவர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிய வருகின்றது.

இந்த இரண்டு முன்னாள் போராளிகளில்; தமிழரசுகட்சி சார்பாக ஒருவரும் ரெலோ அமைப்பின் சார்பில் ஒருவருமாக யாழ் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாகவும் கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கிறன.

ஏற்கெனவே, விடுதலைப்புலிகளின்; ஊடகப்பேச்சாளர் தயாமாஸ்டர் சுதந்திரக்கட்சியில் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக்;கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையிலேயே கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் போராளிகள் இருவரை களமிறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, இந்த தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதி ஒருவரையும் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ் மாவட்ட வேட்பாளர்களை பங்கிடுவதில் கூட்டமைப்பிற்குள் இழுபறி!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவுக்கான தீர்மானத்தினை எடுக்கமுடியாத நிலையில் மீண்டும் நாளை கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இன்று தெரிவித்தனர்.

இலங்கை தமிழரசு கட்சியின் யாழ். மாவட்ட காரியாலயத்தில் இன்று மதியம் 3.30 மணியளவில் கூடிய தேர்தல் நியமனக் குழுவினர்களான தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவஞானம் சிறிதரன் உட்பட வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மற்றும் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா ஆகியோர் இரண்டாம் நாளான இன்று மீண்டும் கலந்துரையாடினர்.

சுமார் 3 மணித்தியாலயங்கள் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் 5 கட்சிகளில் இருந்தும் வேட்பாளர் தெரிவு செய்வதில் குழப்பநிலை ஏற்பட்டதால் மீண்டும் நாளை கூடி தீர்மானம் எடுக்கவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மேலும் கூறினர்.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு யாழ் மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் வேட்பாளர் தெரிவு மற்றும் கட்சிப்பங்கீடு போன்ற வற்றில் அனைத்துக்கட்சிகளும் இணக்கப்பட்டுக்கு வந்துள்ளதுடன் யாழ் மாவட்டத்தில் அங்கத்துவக் கட்சிகளின் பங்கீடு தொடர்பில் இழுபறி நிலை காணப்படுவதால் இறுதித்தீர்மானம் எடுப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக இந்த தேர்தலில் தொடர்பில் போட்டியிடுவதற்கு கட்சிகளுக்கு நேற்றைய கலந்துரையாடலில் தமிழரசுக்கட்சிக்கு 9 பேரும், சுரேஸ்பிறேமச் சந்திரனின் ஈபிஆர்எல்எப் சார்பில் 4 பேரூம் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் 1, ரெலோ அமைப்பின் சார்பில் 3 பேரூம் புளொட் அமைப்ப்பின் சார்பில் 2பேரூம் என்று கட்சிப் பங்கீடு வழங்க தீர்மானிக்கப்பட்டது.

வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பற்றிய மாதிரி வடிவம் இவை உறுதிப்படுத்தப்படாத தகவலாயினும் யாழ் மாவட்டம் மட்டும் பங்கீட்டில் இழுபறி என எமது செய்தியாளர் உறுதிப்படுத்தினார்

யாழ் மாவட்டம் =19

தமிழரசுகட்சி 09
தமிழர்விடுதலைக்கூட்டணி 01
ரெலோ 03
ஈபி.ஆர். எல். எப் 04

புளொட்02
« PREV
NEXT »

No comments