Latest News

July 20, 2013

நீதிமன்றத்திற்கு அழைத்துவரும்போது தப்பிச் சென்ற முன்னாள் இராணுவ வீரர்
by admin - 0


ஹெரோயின் போதைப் பொருளை வைத்­தி­ருந்­த­தாகக் குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்த முன்னாள் இரா­ணுவ வீரர் ஒருவர் சிலாபம் நீதி­மன்­றத்­திற்கு விசா­ர­ணைக்­காக அழைத்து வரு­கையில் இரா­ணுவ பொலி­சாரின் பிடி­யி­லி­ருந்து தப்பிச் சென்­றுள்­ள­தாக பொலிசார் தெரி­வித்­தனர். சிலாபம் குருந்­து­வத்தை எனும் பிர­தே­சத்தைச் சேர்ந்த முன்னாள் வீரர் ஒரு­வரே இவ்­வாறு தப்பிச் சென்­ற­வ­ராவார்.

சந்­தேக நபர் ஹெரோயின் போதைப் பொருளை தம்­வசம் வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்டில் கடந்த மார்ச் மாதம் சிலாபம் பொலி­சாரால் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டதன் பின்னர் பிணையில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்தார். இவர் இரா­ணு­வத்­தி­லி­ருந்து தப்பி வந்­ததன் கார­ண­மாக இரா­ணுவ பொலிசார் நீதி­மன்­றத்தின் அருகில் வைத்தே அவரைக் கைது செய்­தி­ருந்­தனர். இவ்­வாறு இரா­ணுவ பொலி­சாரால் கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர் கணே­முல்ல இரா­ணுவ பொலிஸ் நிலை­யத்தில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்தார்.

இந்­நி­லையில் சந்­தேக நப­ருக்­கு­ரிய வழக்குத் தவணை சிலாபம் நீதி­மன்­றத்தில் இருந்­த­மையால் அவரை இரா­ணுவ பொலிசார் சிலாபம் நீதி­மன்­றத்­திற்கு அழைத்து வந்­தி­ருந்த போதே சந்­தேக நபர் அங்­கி­ருந்து தப்பிச் சென்றுள்ளார். இது தொடர்பில் இராணுவ பொலிசார் சிலாபம் பொலிசாருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்
« PREV
NEXT »

No comments