Latest News

July 07, 2013

இலங்கை மனித உரிமைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டிய ஒரு நாடு!- அமெரிக்கா
by admin - 0

இலங்கை மனித உரிமைகள்
தொடர்பில் அதிக கவனம்
செலுத்தப்பட வேண்டிய
ஒரு நாடு என
அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள்
மனித உரிமைகள் பேரவையின்
23வது கூட்டத்தொடரில் கடந்த
வியாழக்கிழமை உரையாற்றிய ஐ.நா மனித
உரிமைகள் பேரவைக்கான அமெரிக்கப்
பிரதிநிதி எலீன் டொனாஹோ இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா மனித உரிமைகளுக்கான
உயர்ஸ்தானிகராலயத்தின் கவனத்தை மனித உரிமைகள் விடயத்தில் ஈர்ப்பதற்காக நடைபெற்ற
பொது விவாதத்தின்போது அமெரிக்கா தகவல்களை சமர்ப்பித்திருந்தது. மனித உரிமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள
வேண்டியதன் அவசியம் மற்றும் ஐக்கிய
நாடுகளின் விசேட
பிரதிநிதிகளுக்கு அதற்கான
சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் அமெரிக்கப்
பிரதிநிதி எலீன்
டொனாஹோ இதன்போது வலியுறுத்தியுள் கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியாக
ஒன்று கூடுவதற்கு உள்ள
உரிமை இலங்கையில் தொடர்ந்தும்
மீறப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமைகள்
செயற்பாட்டாளர்களுக்கு எதிராக
பகைமை உணர்வுடன் செயற்பாடுகள்
மேற்கொள்ளப்படுவதாக அவர்
குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக
நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் நம்பகத்தன்மையுடன் கூடிய
விசாரணையோ அல்லது சட்ட
நடவடிக்கையோ மேற்கொள்ளப்பட்டதற்கான
அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
« PREV
NEXT »

No comments