Latest News

July 27, 2013

கட்­சிமாற்­ற­ம் தேசியப் பிரச்­சினைத் தீர்வு தொடர்­பான நிலைப்­பாட்டில் மாற்­ற­ம் ஏற்படுத்தாது : தயா­சிறி
by admin - 0

ஐக்­கிய தேசிய கட்­சி­யி­லி­ருந்து ஆளும் கட்­சிக்கு மாறி­விட்டதால் தேசியப் பிரச்­சினைத் தீர்வு தொடர்­பான தனது நிலைப்­பாடு எப்போதும் மாற்­ற­ம­டை­யாது என தயா­சிறி ஜய­சே­கர தெரிவித்தார்.

கேசரி நாளி­த­ழுக்கு வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே முன்னாள் பாரா­ளு­ மன்ற உறுப்­பினர் தயா­சிறி ஜய­சே­கர மேற்­கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தமிழ் மக்­க­ளுக்கு அனை­வரும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய வகையில் நீதி­யா­னதும் நியா­ய­மா­ன­து­மான தீர்வு ஒன்று வழங்­கப்­ப­ட­ வேண்டும் என்­பதில் மாற்றுக் கருத்­துக்கு இட­மில்லை.

அந்தத் தீர்­வா­னது தமிழ், சிங்­கள முஸ்லிம் என அனைத்து மக்­களும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­தாக அமை­ய­வேண்டும். மாறாக புலி ஆத­ரவு தரப்­பி­னரால் அழுத்தம் கொடுக்­கப்­பட்டு வரக்­கூ­டாது. புலி ஆத­ரவு புலம்­பெயர் மக்­களின் அழுத்­தங்கள் அதில் இருக்­கக்­கூ­டாது.

அவ்­வாறு எந்­த­வொரு தரப்­பி­ன­ரதும் அழுத்­தங்கள் இல்­லாத வகையில் எமது நாட்­டுக்­குள்­ளேயே தேசிய அர­சியல் தீர்­வுத்­திட்டம் ஒன்­றுக்கு நாம் சென்றால் எமது எதிர்­பார்ப்­புக்கள் நிறை­வேறும் என்­பதில் சந்­தேகம் இல்லை.

என்னை இன­வா­தி­யாக ஒரு­போதும் பார்க்­க­ வேண்டாம். நான் அவ்­வாறு ஒரு­போதும் இருந்­த­ தில்லை. இருக்­கப்­போ­வ­து­மில்லை.

தமிழ் மக்­க­ளுக்கு நியா­ய­மான தீர்வு வழங்­கப்­ப­ட­ வேண்டும் என்­ப­தனை ஆரம்­பத்­தி­லி­ருந்­தே நான் வலி­யு­றுத்தி வந்­துள்ளேன். அதில் எந்த மாற்­றமும் ஏற்­ப­டாது.

இலங்­கையர் என்ற அடை­யா­ளத்­துடன் நாட்டின் சிங்­கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்­களும் ஒற்­று­மை­யாக சகல உரி­மை­க­ளு­டனும் வாழ­வேண்டும் என்­பதே எனது எதிர்­பார்ப்­பாகும். மேலும் நிரந்­த­ர­மான அர­சியல் தீர்வை அடை­வ­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஒத்­து­ழைப்பு வழங்கவேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என்றார்.

« PREV
NEXT »

No comments