அமைச்சர் விமல் வீரவன்ச பாராளுமன்றத் தெரிவுக்குழுவிலிருந்து விலகப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்படாவிட்டால், தெரிவுக்குழுவிலிருந்து விலக நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.
காணி காவல்துறை அதிகாரங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரைவில் தீர்மானிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
காணி காவல்துறை அதிகாரங்கள் தொடர்பில் உடனடியாக பாராளுமன்றத் தெரிவிக்குழு ஆராய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.இவை குறித்து முன்னுரிமை கொடுத்து, துரிதமாகவும், கலந்துரையாடத் தவறினால், தெரிவுக்குழுவில் பங்கேற்பதில் அர்த்தமில்லை.
அடுத்த மூன்று அல்லது நான்கு அமர்வுகளில் இந்த முக்கியமான விவகாரங்கள் குறித்து ஆராயப்படவில்லையென்றால், தெரிவுக்குழுவில் இருந்து விலகிவிடுவேன்.” என்று தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment