தாங்கிக்கொள்ள முடியாத அளவு வாழ்க்கைச் சுமையினை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மீது சுமத்தியுள்ள இந்த அரசாங்கம் இன்று அவர்களை வீதியில் தள்ளிவிட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய மாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கே.கே. பியதாச கவலை தெரிவித்துள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட மேலும் பல கட்டணங்கள் அதிகரிப்பு போன்றவற்றால் நாட்டு மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், பெருந்தோட்ட மக்களே இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது:-
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் பெருந்தோட்ட மக்கள் மாத்திரமின்றி நாட்டு மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழ்வதற்கான ஒரு நல்ல சூழல் காணப்பட்டது. ஆனால், அந்த சூழல் இன்று முற்றாக தகர்க்கப்பட்டுள்ளது.
நாட்டின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்காளிகளானது இவர்கள் இன்று தமது அன்றாட வாழ்வை கொண்டு நடத்த முடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறான நிலைமைகளுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் பெருந்தோட்ட மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கு பதிலாக அவர்களே வீதியில் தள்ளிவிடுவது வேதனையளிக்கின்றது. எனவே, இந்த விரோத அரசாங்கத்தை விரட்டியடிக்க அனைத்து மக்களும் ஒன்றுபடவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments
Post a Comment