Latest News

July 31, 2013

அரசாங்கம் தேர்தலை தடுக்க வாய்ப்புண்டு - விக்னேஸ்வரன்
by admin - 1

அரசின் விருப்பமில்லாமல் சர்வ தேச அழுத்தத்தினால் நடைபெற வுள்ள வடக்குமாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் தான் வெல் வதற்குரிய அனைத்து வன்முறை கேடுகளினையும் முன்னெடுக்கும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் வடக்குமாகாண முதலமைச் சர் வேட்பாளர் முன்னாள் நீதியர சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித் துள்ளார். சில வேளைகளில் தேர்தலினை நடத்தாமல் செய்வதற்குரிய ஏற் பாடுகளினையும் இந்த அரசாங் கம் முன்னெடுக்க வாய்ப்புண்டு எனவும் அவர் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகத்தில்  நடை பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரி வித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது மாகாணங்களில் ஆளு நரின் ஆணையே பிரதிபலிக்கின் றது. சில அரசியல்வாதிகளின் செல்வாக்கும் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் மேலோங்கியே காணப்படுகின்றது.

இதனால் வடக்கு மாகாணத் தில் உள்ள அரச அலுவலர்கள் சுதந்திரமாக செயற்பட முடியாத நிலை காணப்படுகின்றது. இத் தேர்தலின் மூலம் சர்வதேசத் தின் கவனத்தை நாம் ஈர்க்க முடி யும். முன்பு வடக்கினை ஆயுதக் குழுகள்  பலாத்காரமாக வைத்துள்ளனர் என அரசி னால் கூறப்பட்டு வந்தது. இதனை சர்வ தேசமும் நம்பிவந்தது. ஆனால் தற்போது நிலை வேறு. ஜனநாயக முறைமையில் மக்கள் தமது பிரதிநிதிகளினை தெரிவு செய்யவுள்ளனர் என்பது வெளிப்படையாகவே அனை வரும் தெரிந்து கொண்டுள்ளனர். ஆகவே இதில் சர்வதேசம் எமது மக்கம் செவி சாய்க்கும். இது வரையும் தமிழ் மக்களினை பாதுகாத்துவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை அனைவரும் பலப்படுத்துவோம் என தெரிவித்த முதன்மை வேட்பாளர் தடைகளினை தாண்டி தமது உரித்தினை மக்கள் நிலை நாட்ட வேண் டும் எனவும் அவர் தெரிவித்தார். 
« PREV
NEXT »

1 comment

தங்க முகுந்தன் said...

பாவம் இப்போது தான் அரசியல் படிக்கிறார் - முதன்மை வேட்பாளர்! அவருக்கு உண்மையிலேயே வடக்கு நிலை தெரியாதுதான்! அரசின் நிலைகூட தெரியாமல் கருத்தைச் சொல்கிறார்! 2000, 2001 பாராளுமன்றத் தேர்தல்கள் நியாயமாக நடைபெற்றிருந்தாலும் அவை அந்தக் காலம் முடிவதற்குள்ளேயே கலைக்கப்பட்டன. ஏன் இப்போது தேர்தல் நடக்கும் வடக்கு மாகாண சபை முன்பு இணைந்திருந்தபோது ஒரு வருடமும் 2,3 மாதங்களுமே இயங்கியது அதன்பின் அது ஜனாதிபதியால் கலைக்கப்ட்டது! இப்போது இந்த மாகாணத் தேர்தலைக்கூட ரத்துச் செய்யலாம். தெரிவு செய்ய்ப்பட்ட பின்னர் கலைக்கலாம். இது ஜனாதிபதியின் அதிகாரம். 100,000 மக்களையே கொன்ற பிறகு இது என்ன சர்வசாதாரணம்!