கனடாவின் ஒன்ராரியோ மாநிலத்தில அமைந்துள்ள் பிராம்டன் நகரில் வருடாந்தம் நடைபெறும் கரபிறாம் பல்காலச்சார விழாவில் முதன்முறையாக தமிழர்களைப் பிரதிநிதித்தவப்படுத்தி ஈழம் சாவடி பல சிங்களம் விடுத்த சவால்களைக் கடந்து இம்முறை சிறப்புற அமைந்தது.
பிராம்டன் தமிழ் ஒன்றியத்தின் முன்முயற்சியில் பிராம்டன் நகரில் அதிகம் வதியும் தமிழர்களின் சார்பில் இச்சாவடி அமைந்தது. கலாச்சாரங்களின் சங்கமாக அமையும் இவ் மூன்று நாள் விழாவில் அமையும் 13 கலாச்சார சாவடிகளில் ஒன்றாக ஈழம் சாவடியும் அமைந்தது தமிழர்களுக்கு பெருமை சேர்ப்பதாக பிராம்டன் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு மக்கள் பிரிதிநிதிகளும் தெரிவித்தனர்.
சிங்களம் விடுத்த ஏதோச்சாதிகார நாடு கடந்த மனித உரிமை மீறல் சவால்களை நன்கு புரிந்து கொண்ட கனடாவின் அனைத்துத் தரப்பினரும் பெருமளவில் கலந்து கொண்டு தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக உறுதுணையாக நின்றனர்
கனடிய அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் புதிய அமைச்சரவையில் பல்கலாச்சார அமைச்சாரக திகழும் அமைச்சர் ரிம் உப்பால் கலந்து கொண்டு சி;றப்பித்தார்.
பிரம்டன் நகரபிதா சுசன் பனல் அவர்கள் ஈழம் சாவடிக்கு விஐயம் செய்து நீண்ட நேரம் சாவடியில் இருந்த அனைத்துத் தரப்பினரையும் ஒவ்வொருவராக சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பிரம்டன் தொகுதிகளை மத்திய கனடிய பாராளுமன்றத்தில் ஆளும் கன்சவேட்டிவ் கட்சியைப் பிரிதிநிதித்துவப்படுத்தும் பாம் கில் கைல் சீபாக் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் வருகை தந்து சிறப்பித்தனர்.
ஒரே ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபைசன் மற்றும் அவரின் புதிய சனநாயகக்கட்சியைக் சேர்ந்த பிரிட்டிஸ் கொலம்பியா பாராளுமன்ற உறுப்பினர் யேனி சிம்ஸ் ஆகியோரும் ஈழம் சாவடி திறப்பு விழாவில் கலந்து சிறப்பித்தனர்.
இது தவிர ஒன்ராரியோ முதல்வர் கதலின் வின்னைப் பிரதிநிதித்துவப்படுத்தி அக் கட்சியின் பிராம்டன் மேற்கு ஒன்ராரியோ பாராளுமன்ற உறுப்பினர் விக் டிலனும் கலந்து கொண்டார்.
அவர்கள் தவிர பீல் பிராந்திய கவுன்சிலர்கள் மற்றும் பிராம்டன் நகர சபை கவுன்சிலர்கள் என பெருவாரியான மக்கள் பிரிதிநிதிகள் ஈழர் சாவடிக்கு வருகை தந்தனர். இவ்வளவு மக்கள் பிரிதிநிதிகள் எந்தவொரு சாவடிக்கும் செல்லாது ஈழம் சாவடிக்கே வருகை தந்தனர் என்றார் கரபிறாம் குழுவில் ஒருவர்.
இவர்கள் தவிர பீல் காவல்துறையினர் தீயணைப்புப் பிரிவினர் என பல தரப்பினரும் வருகை தந்தனர். தமிழர்களை வன்முறையாளர்கள் என சிங்கள தரப்பு தொடர்ந்தும் காட்ட முயல்வது இங்கு தகர்ந்து போயுள்ளது என்றார் கனடியர் ஒருவர்.
உணவுச்சாவடிகள் மலிவு விலை வர்த்தகச் சாவடிகள் தமிழர் பாரம்பரிய கண்காட்சி தமிழர் கலைநிகழ்வுகள் என ஈழம் சாவடி ஒவ்வொரு நாளும் அனைத்து மக்களுக்கும் பெருவிருந்தாக அமைந்தது.
வெள்ளி மாலை இறுதி நிகழ்வாக பாரதி கலைக்கூடத்தின் இன்னிசை நிகழ்ச்சியும் சனி மாலை இறுதி நிகழ்வாக அரவிந்தனின் மெகா ரியூனர்ஸ் இன்னிசை நிகழ்வும் சிறப்புற அமைந்தன.
பிராம்டனில் Sandalwood Pkwy / Dixie Road சந்திப்புக்கு அருகாமையில் உள்ள Brampton Soccer Centre இல் பிரமாண்டமான அரங்கில் ஈழம் சாவடி அமைந்தது.
ஈழம் சாவடி அமைவதற்கு தமது கடும் எதிர்ப்பை சிறீலங்காவின் தூதுவராலயமும் உலகலாவிய சிங்கள கடும்கோப்பாளர்களும் அரச ஆதரவாளர்களும் வழமைபோல் இறுதிவரை வெளிப்படுத்தி வந்தனர்.
ஈழம் என்பது பயங்கரவாதம் என்றும் கற்பனைப் பெயர் என்றும் பிரிவினைவாதம் என்றும் அனுமதிக்கக்கூடாது என்றும் உலகில் அப்படியொரு நாடே இல்லையென்றும் ஒருபுறமும் ஈழம் என்பது சிங்கள மக்கள் வாழும் நாடு தமிழர்கள் அப்பெயரை பயன்படுத்தக் கூடாது என்றும் அனைத்துத் தரப்பிற்கும் கடிதம் மின்அஞ்சல் தொலைபேசி அழைப்பு என பேரழுத்தம் கொடுத்தனர்;. எனினும் வழமைபோல் சிங்கள அராஐகம் மண்ணைக் கவ்வியுள்ளது.
No comments
Post a Comment