ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரி இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டு பேச்சுக்களை நடத்தியுள்ளார்
நவநீதம்பிள்ளைக்கு வருகைக்கு முன்னர் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.
ஆபிரகாம் மாத்தாய் என்ற அந்த அதிகாரி தலைமையிலான குழுவினர், கிழக்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் ரொஹான் அமரசிங்கவை சந்தித்து உரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு திருகோணமலையில் உள்ள கடற்படை தளத்தில் நடைபெற்றது.
உலகளாவிய ரீதியில் நவநீதம்பிள்ளையின் பாதுகாப்பு விடயங்களில் மாத்தாயும் அவரது குழுவினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சேவைகளிலும் பணியாற்றியுள்ளார்.
No comments
Post a Comment