ஈழத்தில் இலங்கை இராணுவதின் இன அழிப்பு நடந்த இறுதி நிமிடத்தில் கூட விடுதலை புலிகளினால் சர்வதேசத்துக்கு மக்களை காப்பாற்றுமாறு கோரிக்கை விடப்பட்டது ஆனால் ஏற்றுகொள்ளாத சர்வதேசம் ஸ்ரீலங்கா அரச இன அழிப்புக்கு கண்மூடி நின்றது. "காப்பற்றுங்கள் காப்பற்றுங்கள்" என்று கதறிய மக்களை காப்பற்ற தவறிய உலகம் தற்பொழுது உணருகிறதா? தமிழர்கள் இழந்தவற்றை சர்வதேசம் பெற்று தருமா? தமிழீழம் என்ற இழந்த தமிழர் நாட்டை அங்கீகரித்தால் மட்டுமே இவர்களின் தவறுக்கு தமிழர்களுக்கு செய்யும் ஒரு மிகப்பெரிய உதவியாகவும் அவர்களின் தவறுக்கு தேடிக்கொள்ளும் பாவ மன்னிப்பாகும் .
சரவணை மைந்தன்
அமெரிக்க அறிக்கை
தொடர்புடைய செய்தி
இலங்கையில் நடைபெற்ற போரின் இறுதிக்கட்ட காலங்களில் அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள், இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகள்
அமைப்புக்கும் எதிராக அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டு வந்தன என்று அமெரிக்காவின் புதிய அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் ராஜாங்க செயலாளர் மெட்லின் அல்பிரைட் தலைமையிலான 3
அமெரிக்க நிறுவனங்கள் நடத்திய ஆய்வுகளின்
அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள அந்த
அறிக்கையில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சர்வதேசம், இலங்கையில் போரை நிறுத்துவதற்கோ, அதற்குரிய பொறுப்புகளை நிறைவேற்றவோ நடவடிக்கை தஞ்சம் வழங்குவது, உரிமைகளை பாதுகாப்பு தொடர்பிலான
சர்வதேச இணக்கப்பாடுகளை பல நாடுகள்
ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனால்
அவற்றை அமுல்படுத்துவதில்லை. முக்கியமாக இலங்கையில் நடைபெற்ற
போரின் இறுதிக் கட்டத்தில் சர்வதேசம்
தமது கடமையை சரிவர
நிறைவேற்றவில்லை என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Social Buttons