உடப்பு ஆடிமுனைப் பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் சேதுரூபன் என்ற வர்த்தகவர் ஒருவர்
இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். நேற்றிரவு இவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வீடு திரும்பிக்கொண்டிருந்த குறித்த வர்த்தகரை சிகப்பு நிற காரொன்றில் வந்த
சிலரே கடத்திச்சென்றுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்முறைப்பாடையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments
Post a Comment