செய்திதாளின ஊடகவியலாளர் நேற்று இரவு தாக்கப்பட்டுள்ளார். வேலை முடிந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிள் மூலம் திரும்பிக் கொண்டிருந்தபோதே அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. செய்தியாளரான குணாளன் திலீப் வீடு திரும்பிக் கொண்டிருந்த
போது முச்சக்கர வண்டியில் பின்தொடர்ந்தவர்களே தாக்குதல்
நடத்தியுள்ளனர். மகாஜனா கல்லூரிக்கு அருகில் இந்த சம்பவம்
இடம்பெற்றுள்ளது. கை மற்றும் கால்களில் காயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் வெளியேறினார். இத்தாக்குதல் சம்பவத்தையடுத்து, தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகதெரிவிக்கப்படுகிறது. வடமாகாண சபைத்தேர்தல் தொடர்பில் வெளியான கட்டுரை ஒன்று தொடர்பிலேயே இவர் தாக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
No comments
Post a Comment