Latest News

July 31, 2013

விக்கி­னேஸ்­வ­ரனின் அறை­கூ­வலும் தொடரும் அச்­சு­றுத்­தல்­களும்
by admin - 0

தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் வட­மா­கா­ண­ச­பைக்­கான வேட்­பா­ளர்கள் இரா­ணு­வத்­தி­னரால் அச்­சு­றுத்­தப்­ப­டு­வ­தா­கவும், வேட்­பா­ளர்­களின் தக­வல்­களை பெறும் தோர­ணையில் வேட்­பா­ளர்­களின் வீடு­க­ளுக்குச் செல்லும் இரா­ணு­வத்­தினர் அவர்­களை அச்­சு­றுத்த முனை­வ­தா­கவும், தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுரேஷ்­ பி­ரே­மச்­சந்­திரன் தெரி­வித்­துள்ளார்.
தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் யாழ். மாவட்ட வேட்­பாளர் சட்­டத்­த­ரணி சஜந்­தனின் சாவ­கச்­சே­ரியில் உள்ள வீட்­டுக்கு நேற்று முன்­தினம் சென்ற இரா­ணு­வத்­தினர் அவ­ரது விப­ரங்­களை கோரி­யுள்­ளனர். தான் ஒரு சட்­டத்­த­ரணி என்றும் இரா­ணு­வத்­தினர் தன்­னிடம் விப­ரங்­களை கோர முடி­யாது என்றும் தெரி­வித்த குறித்த வேட்­பாளர் இரா­ணு­வத்­தி­னரை திருப்பி அனுப்­பி­யுள்ளார். தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை வட­மா­கா­ண­ச­பைக்­கான வேட்­பு­ம­னுக்­களை ஐந்து மாவட்­டங்­க­ளிலும் தாக்கல் செய்­தி­ருந்­தது.
யாழ்.மாவட்­டத்தில் கூட்­ட­மைப்பின் சார்பில் சட்­டத்­த­ரணி சஜந்தன் போட்­டி­யி­டு­கின்றார். யாழ். மாவட்ட வேட்பு மனு தாக்கல் செய்­யப்­பட்டு சில மணி நேரங்கள் கடப்­ப­தற்கு முன்னர் அவ­ரது வீட்­டிற்கு மூன்று தட­வைகள் வந்த இரா­ணு­வத்­தினர் விப­ரங்­களை கோரி­யுள்­ளனர். இரா­ணு­வத்­தி­னரின் இந்தச் செயற்­பாடு தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் வேட்­பா­ளர்­களை அச்­சு­றுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­யாகும். இதனை கூட்­ட­மைப்பு கண்­டிக்­கின்­றது. இவ்­வி­டயம் குறித்து தேர்தல்கள் ஆணை­யா­ள­ருக்கு அறி­விப்­ப­துடன் சர்­வ­தே­சத்தின் கவ­னத்­திற்கும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு கொண்­டு­வரும் என்று கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்­துள்ளார்.
வட­மா­கா­ண­சபைத் தேர்தல் நீதி நியா­ய­மா­கவும், சுதந்­தி­ர­மா­கவும் நடத்­தப்­ப­டுமா? என்ற சந்­தேகம் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் மத்­தியில் எழுந்­துள்­ளது. நேற்று முன்­தினம் ஐந்து மாவட்­டங்­க­ளிலும், வேட்­பு­ம­னுக்­களை தாக்கல் செய்த பின்னர் யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள தமி­ழ­ர­சுக்­கட்­சியின் அலு­வ­ல­கத்தில் செய்­தி­யாளர் மாநாட்­டினை நடத்­திய கூட்­ட­மைப்பின் தலை­வரும், திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா. சம்­பந்தன் இந்த சந்­தே­கத்தை கிளப்­பி­யி­ருந்தார்.
மாகா­ண­சபை தேர்தல் சர்­வ­தே­சத்தின் அழுத்தம் கார­ண­மா­கவே நடை­பெ­று­கின்­றது. இத்­தேர்தல் நியா­ய­மா­ன­தா­கவும், நீதி­யா­ன­தா­கவும், ஜன­நாயக விதி முறை­க­ளுக்கு அமை­யவும், நடை­பெற­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என்று சம்­பந்தன் எம்.பி.வலி­யு­றுத்­தி­யுள்ளார்.வட­மாகா­ண­சபைத் தேர்தல் சுதந்­தி­ர­மாக நடை­பெ­று­வ­தற்கு மக்­க­ளுக்கு ஜன­நா­யக உரி­மைகள் வழங்­கப்­ப­ட­வேண்டும். மக்கள் தமது ஜன­நா­யக உரி­மை­களைப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு மக்­க­ளுக்கு போதிய சுதந்­திரம் வழங்­கப்­ப­ட­வேண்டும். அத்­த­கை­ய­தொரு தேர்­த­லுக்கு பூரண ஒத்­து­ழைப்பை வழங்க தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு தயா­ரா­கவே உள்­ளது. ஆனால் நீதி நியா­ய­மான தேர்தல் நடை­பெ­றுமா? என்­பது குறித்து எமக்கு பலத்த சந்­தே­கங்கள் எழுந்­துள்­ளன. இதற்கு போதிய நியா­யங்­களும் உள்­ளன என்றும் சம்­பந்தன் எம்.பி. சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
வட­மா­கா­ண­ச­பைக்­கான தேர்தல் அறி­விப்பு வெளியா­கிய பின்னர் நீதி, நியா­ய­மான தேர்தல் குறித்து தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு சந்­தேகம் தெரி­வித்து வரு­கின்­றது. வடக்கில் இரா­ணுவப் பிர­சன்னம் குறைக்­கப்­ப­ட­வேண்­டு­மென்றும் சர்­வ­தேச கண்­கா­ணிப்­பா­ளர்கள் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டு­மென்றும் சுயா­தீன ஆணைக்­கு­ழுக்கள் அமைக்­கப்­பட வேண்­டு­மெ­னவும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு உட்­பட எதிர்க்­கட்­சிகள் கோரிக்கை விடுத்தே வரு­கின்­றன.
ஆனாலும் இந்த விடயம் தொடர்பில் அர­சாங்கம் கவனம் செலுத்­து­வ­தாக தெரி­ய­வில்லை. சர்­வ­தேச கண்­கா­ணிப்­பா­ளர்­களை பணியில் ஈடு­ப­டுத்­து­வ­தற்கு மாத்­திரம் அர­சாங்கம் அனு­மதி வழங்­கி­யுள்­ளது. இதற்­கி­ணங்க தேர்தல் திணைக்­க­ளமும் நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளது.
தேர்தல் வேட்­பு­ம­னுக்கள் தாக்கல் செய்­யப்­ப­டு­வ­தற்கு முன்­னரே தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் வேட்­பா­ளர்கள் அச்­சு­றுத்­தப்­ப­டு­வ­தா­னது சுதந்­தி­ர­மான நீதி­யான தேர்­த­லுக்கு வழி­வ­குக்­கப்­போ­வ­தில்லை. வட­மா­கா­ணத்தில் இடம் பெற்ற உள்­ளூ­ராட்சி தேர்­தலின் போதும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் வேட்­பா­ளர்கள் மீது வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­ட­துடன் அச்­சு­றுத்தும் நட­வ­டிக்­கை­களும் இடம்­பெற்­றி­ருந்­தன. இத்­த­கை­ய­தொரு நிலைமை இந்தத் தேர்­த­லிலும் ஏற்­ப­டலாம் என்ற அச்ச நிலைக்கு தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு தள்­ளப்­பட்­டுள்­ளது.
இரா­ணு­வத்தின் பிர­சன்னம் அதி­க­ரித்­துள்­ள­மை­யினால் நீதி நியா­ய­மான தேர்­தலை எதிர்­பார்க்க முடி­யாது என்று தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு குற்­றஞ்­சாட்­டியே வந்­தது. அதனை சரி­யென நிரூ­பிக்கும் வகையில் கூட்­ட­மைப்பின் வேட்­பா­ளர்­களை அச்­சு­றுத்தும் படை­யி­னரின் செயற்­பாடு கூட்­ட­மைப்பின் குற்­றச்­சாட்­டிற்கு வலு­சேர்ப்­ப­தா­கவே அமைந்­துள்­ளது.
இந்த நிலையில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் முத­ல­மைச்சர் வேட்­பாளர் சி.வி. விக்கி­னேஸ்­வரன் வேட்­பு­ம­னு­தாக்கல் செய்த பின்னர் கருத்துத் தெரி­விக்­கையில், நாம் அனை­வரும் வேறு­பா­டு­களை மறந்து ஒன்­று­ப­ட­வேண்டும் என அழைப்பு விடுத்­துள்ளார்.
இத­னை­விட 13 ஆவது திருத்தச் சட்­டத்­தினை எந்­த­ள­விற்கு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­போ­கின்றோம் என்­பது வட­மா­கா­ண­சபைத் தேர்­தலில் தமிழ் மக்கள் எமக்கு வழங்­கு­கின்ற ஆத­ர­வி­லேயே தங்­கி­யுள்­ளது. தமிழ் மக்­களின் ஏகோ­பித்த ஆத­ரவைப் பெற்ற கட்­சி­யாக கூட்­ட­மைப்பு திகழ்­வ­தனால் எமது கட்சி வட­மா­கா­ண­சபைத் தேர்­தலில் வெற்­றி­யீட்டும் என்­பதில் எவ்­வித சந்­தே­கங்­களும் இல்லை. வட­மா­கா­ண­சபைத் தேர்தல் எமக்குக் கிடைத்த சந்­தர்ப்­ப­மாகும். இத­னைப்­ப­யன்­ப­டுத்தி நாம் அனை­வரும் வேறு­பா­டு­களை மறந்து ஒன்று பட்டு இத்­தேர்­தலில் செயற்­ப­ட­வேண்டும். நாம் ஒற்­று­மை­யாக நின்று செயற்­படும் போது பல விட­யங்­களை சாதித்­துக்­கொள்ள முடியும் என்றும் நீதி­ய­ரசர் விக்கி­னேஸ்­வரன் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.
வடக்கு மாகா­ண­ச­பைக்­கான கூட்­ட­மைப்பின் முத­ல­மைச்சர் வேட்­பா­ளரின் இத்­த­கைய கருத்­தா­னது வர­வேற்­கத்தக்க­தாகும். அனை­வரும் வேறு­பா­டு­களை மறந்து ஒற்­று­மைப்­ப­ட­வேண்டும். இதன் மூலமே நாட்டை கட்­டி­யெ­ழுப்ப முடியும் என்­பதை அவர் ஆணித்­த­ர­மாக சொல்­லி­யி­ருக்­கின்றார்.
இவ்­வா­றான நிலையில் வட­மா­கா­ண­சபைத் தேர்­தலை சுதந்­தி­ர­மா­கவும் நீதி­யா­கவும் நடத்தி மக்­களின் ஆத­ரவைப் பெற்று அங்கு ஆட்­சியை கைப்­பற்­று­ப­வர்­க­ளுடன் பேச்­சுக்­களை நடத்தி ஓர் இணக்­கப்­பாட்­டிற்கு வர­வேண்­டி­யது இன்­றி­ய­மை­யா­த­தாகும். வடக்கில் முத­ல­மைச்­ச­ராக சி.வி. விக்கினேஸ்வரன் வருவாரேயானால் அவருடன் 13 ஆவது திருத்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராகவே உள்ளது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் கூறியுள்ளார்.
தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை நேற்று அலரிமாளிகையில் சந்தித்து பேசியபோதே ஜனாதிபதி இத்தகைய கருத்தினை வெளியிட்டுள்ளார். எனவே வடக்கு மாகாணசபை தேர்தலில் வன்முறைகளை கட்டவிழ்த்து விட முயலாது சுதந்திரமான தேர்தலுக்கு வழிவகைகள் செய்யப்படவேண்டும். அதன் மூலமே இலங்கை தொடர்பில் சர்வதேச ரீதியில் நற்பெயரை ஏற்படுத்த முடியும்.
வடமாகாணசபைத் தேர்தல் செயற்பாடுகளில் இராணுவத்தினர் ஈடுபடுவதை தடுப்பதும் இன்றைய அவசியத் தேவையாக உள்ளது. தமிழ் தேசியக்கூட்டமைப்பும் இந்தக் கோரிக்கையை முன்வைத்து வருகின்றது. இதற்கான நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபடுவது சிறந்ததாகவே அமையும்.
« PREV
NEXT »

No comments