Latest News

July 23, 2013

மலையக தேசிய முன்னணி அமைப்பின் கீழ் 4 கட்சிகள் மண்வெட்டி சின்னத்தில் போட்டி
by admin - 0


மலையக தேசிய முன்னணி அமைப்பின் கீழ் நான்கு கட்சிகள் மண்வெட்டி சின்னத்தின் கீழ் மத்திய மாகாண சபையின் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட உள்ளன.

மலையக மக்கள் முன்னணி, புதிய இடதுசாரி முன்னணி, ஜனநாயக மக்கள் காங்கிரஸ் மற்றும் தொழிலாளர் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளே இவ்வாறு போட்டியிட உள்ளதாக இன்று நிப்போன் ஹோட்டலில் இடம்பெற்ற செய்யதியாளர் மாநாட்டில் கூட்டாக அறிவித்தன.

13ஆவது திருத்தத்தில் அரசாங்கம் எவ்வித மாற்றத்தைக் கொண்டு வந்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது, தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் பட்டசத்தில் மலையக மக்களுக்களுக்கான தீர்வும் அதில் உள்ளடக்கப்பட வேண்டும், 150 வருடகாலமாக வீடு, காணிகள் அற்று வாழும் மலையக சமூகத்தினருக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட வேண்டும் போன்ற பல நிபந்தனைகளுடன் தேர்தலில் போட்டியிட உள்ளதாக மலையக தேசிய முன்னணி அமைப்பு அறிவித்துள்ளது.

மாத்தளை, கண்டி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் எமது அமைப்பு தேர்தலில் போட்டியிட உள்ளது. இதேநேரம் பிரஜைகள் முன்னணி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவை எமது அமைப்புடன் இணைய பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் மலையக தேசிய முன்னணி அமைப்பு தெரிவித்துள்ளது.
« PREV
NEXT »

No comments