Facebook,டூவிட்டர் போன்ற புதிய சமூக ஊடகங்கள் நாடுகளை குழப்புவதற்கான ஆற்றல்களை கொண்டிருக்கின்றன.இந்த சமூக ஊடகங்களை பயன்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு அதிகமான ஆட்கள் தேவையில்லை.இவர்களை பாரம்பரிய தேசிய பாதுகாப்பு முறையில் கட்டுப்படுத்த முடியாது.எனவே,புலனாய்வு அமைப்புகள் ஒன்றிணைக்கப்பட்ட கட்டளை அமைப்பின் கீழ் வேலை செய்வது அவசியமானது.
இவ்வாறு தெரிவித்துள்ளார் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச. கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் முதுமாணி மற்றும் கலாநிதி பாடநெறிகளுக்கான ஆரம்ப விழாவில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், மிகவும் விருப்பத்துக்குரிய அரசியல் தலைமைத்துவம் கொண்ட ஒரு ஜனநாயக நாடாக இலங்கை இருக்கிறது. இங்கு அரபுவசந்தம் போன்ற எழுச்சிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. அரசு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருப்பதனால் அவ்வாறான எழுச்சிகள் உருவாகுவதற்கான சந்தர்ப்பம் மிகமிக குறைவு. என்றாலும் இந்தவகையான அச்சுறுத்தலை கண்காணிக்க வேண்டிய தேவையுள்ளது. பேஸ்புக்,டூவிட்டர் போன்ற புதிய சமூக ஊடகங்கள் நாடுகளைக் குழப்புவதற்கான ஆற்றல்களை கொண்டிருக்கின்றன என்பதனை டுனீஷியா, லிபியா மற்றும் எஃப்து போன்ற நாடுகளில் கண்டிருக்கின்றோம். இந்த சமூக ஊடகங்களை பயன்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு அதிகமான ஆட்கள் தேவையில்லை, எனவே இவர்களை பாரம்பரிய தேசிய பாதுகாப்பு முறையில் கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே,புலனாய்வு அமைப்புகள் ஒன்றிணைக்கப்பட்ட கட்டளை அமைப்பின் கீழ் வேலை செய்வது அவசியம். சீனா,ரஷ்யா போன்ற சக்திவாய்ந்த நாடுகளுடன் தற்போதுள்ள நல்லுறவை மேலும் பலப்படுத்திக்கொள்வது அவசியம். வீட்டோ அதிகாரமுள்ள இந்த நாடுகள் இலங்கை மீதான சர்வதேச நடவடிக்கைககள் மீது செல்வாக்கு செலுத்தவல்லன என்றும் அவர் தெரிவித்தார்.
No comments
Post a Comment