Latest News

June 11, 2013

புதுமாத்தளன் பகுதியில் இரும்பு ஏற்றும் வாகனம் சோதனைச் சாவடியில் லஞ்சம் கொடுத்து செல்கிறது ஆதாரம் இணைப்பு
by admin - 0

முல்லைத்தீவு -முள்ளிவாய்க்கால், மாத்தளன்,வலைஞர் மடம் உள்ளிட்ட
இறுதி யுத்தம் இடம்பெற்ற
பிரதேசங்களிலில் யுத்த காலத்தில் மக்களால் கைவிடப்பட்ட
பெருமளவு வாகனங்கள்,இரும்பு பொருட்களை இராணுவத்தினரின்
ஆதரவுடன் தென்னிலங்கை வர்த்தகர்கள்
கொள்ளையிட்டு வரும் சம்பவம்
அம்பலத்திற்கு வந்துள்ளது. குறித்த பிரதேசங்களில் மக்கள் கைவிட்டுச்
சென்ற பல கோடி பெறுமதியான வாகனங்கள் மற்றும் விடுதலைப் புலிகளுடைய வாகனங்கள் யுத்தத்தின் பின்னர் காணப்பட்டிருந்தன. எனினும் கடந்த 4 வருடங்களில் அவற்றில் 60வீதமான வாகனங்கள் காணாமல் போயுள்ளன. அல்லது அந்த வாகனங்களின் பகுதிகள் காணாமல் போயுள்ளன. ஆனால் மக்களிடம் ஒப்படைக்கப்பட்ட
வாகனங்களினதும், சொத்துக்களினதும்
அளவு மிகக்குறைவானதே. இந்நிலையில் குறித்த வாகனங்கள் அரசாங்க
செல்வாக்குள்ள தென்னிலங்கை வர்த்தகர்களினால்
கொள்ளையிடப்பட்டு வருகின்றது. குறிப்பாக பாதுகாப்பு அமைச்சின்
அனுமதி பெற்று இராணுவத்தினரின்
பூரணமான பாதுகாப்புடன் இந்த வாகனங்கள் பழைய இரும்புக்காக
தென்னிலங்கைக்கு கடத்தப்பட்டுக்
கொண்டிருக்கின்றது. அண்மையில் புதுமாத்தளன் பகுதியில்
இரும்பு ஏற்றும் வாகனம் இராணுவ
சோதனைச் சாவடியில் லஞ்சம்
கொடுத்து பதிவு செய்த பின்னர்
செல்வதை படமாக்கப்பட்டுள்ளது


« PREV
NEXT »

No comments