கிளாஸ்கோ நகருக்கு யார் வரப்போகிறார்கள் என்று கமலேஷ் சர்மா அவர்கள் ஒரு கணக்கு போட்டுள்ளார் எனத் தெரியவருகிறது. மகிந்தரை இந்த நினைவு நாளுக்கு அழைக்கவேண்டாம் என்று சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட சில மனித உரிமை அமைப்புகள் பிரித்தானியாவுக்கு கடந்தவார இறுதியில், கோரிக்கை விடுத்துள்ளார்கள். இருப்பினும் இக் கோரிக்கையை பிரித்தானிய அரசு ஏற்க்க மறுத்துவிட்டதாக இன்று செய்திகள் வெளியாகியுள்ளது. மகிந்தர் லண்டன் என்ன, ஸ்காட்லான் என்ன, அயர்லாந்து வந்தாலும் அவரை விரட்டியடிப்போம் என்று தகவல் அறிந்த பிரித்தானியத் தமிழர்கள் பலர் தெரிவித்துள்ளார்கள். லண்டனில் இருந்து பேரூந்துகளில் சென்றாவது ஸ்காட்லாந்தில் மகிந்தருக்கு எதிராக கொடி பிடிப்போம் என்றும் இத் தமிழர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள்.
எனவே வரவிருக்கும் 2014 ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி பாரியா ஆர்ப்பாட்டம் ஒன்று ஸ்காட்லான் மண்ணில் நிகழலாம். விடுதலைக்காகப் போராடி உயிர் நீத்த மாவீரன் சர்.வில்லியம் வாலஸ் வாழ்ந்த பூமியில் தமிழர்கள் கால் தடம் பதிக்கும் வரலாற்று நிகழ்வு ஒன்றும் நடைபெறலாம். பிரித்தானியரிடம் இருந்து விடுதலை வேண்டும் என்று இன்றுவரை போராடி வரும் ஸ்காட்லாந்து மக்கள், தமிழர்களின் நியாயமான கோரிக்கையை நிச்சயம் ஏற்பார்கள் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை எனலாம்.
இந்தக் காணொளியைப் பாருங்கள். இவர் தான் ஸ்காட்லன் விடுதலைக்காக போராடிய வில்லியம் வாலஸ். நீண்ட நாள் போராடிய இவரை இறுதியில் பிரித்தானியர்கள் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்து பின்னர் அவரை சூழ்ச்சியால் கைதுசெய்கிறார்கள். அவரின் தலையை வெட்டவேண்டும் என்று ஆணையிடுகிறார் பிரித்தானிய மன்னர். ஆனால் தலையை வெட்ட சில நொடிக்கு முன்னர் மன்னர் ஒரு அறிவித்தலை விடுகிறார். அது என்னவென்றால் வில்லியம் வாலஸ் மன்னிப்புக் கோரினால் அவரை உயிரோடு விடுவேன் என்று. கடுமையாகத் தாக்கப்பட்டு தலை துண்டிக்கப்படவுள்ள நிலையில் அவர் வாய் திறந்து பேச முற்படுகிறார். உடனே தலையை துண்டிப்பதற்காக அங்கே நின்ற காவலாளி வில்லியம் வாலஸ் மன்னிப்பு கேட்க்கப் போகிறார் என்று நினைக்கிறார். ஆனால் அவர் வாயில் அது வரவில்லை ! "பிரீடம்"(FREEDOM) அதாவது விடுதலை வேண்டும் என்ற வார்த்தை தான் வருகிறது. அதனை கேட்ட காவலாளி அவர் தலையைக் கொய்கிறார் ! முழுப் படத்தை பார்த்தால் எமது ஈழப் போராட்டம் போல இருக்கும் படத்தின் பெயர் "பிரேவ் காட்" Braveheart உண்மைச் சம்பவத்தை படமாக்கியுள்ளார்கள்.

No comments
Post a Comment