Latest News

June 05, 2013

இறுதி யுத்தத்தில் பாவிக்கப்பட்ட ஆயுதங்களின் இரசாயன கசிவுகளால் பலருக்கு புற்றுநோய்
by admin - 0

வன்னியில் நடைபெற்ற இறுதி யுத்தத்திற்குப் பின்னர் வடக்கு மாகாணத்தில் அதிகமானோர் புற்றுநோய்த் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளமை இனங்காணப்பட்டுள்ளதாக
யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இறுதி யுத்தத்திற்குப் பின்னர் கிளிநொச்சி,
முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில்
இருந்து அதிகமான புற்று நோயாளர்கள்
சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வன்னியில் இறுதியாக நடைபெற்ற
போரின்போது பாவிக்கப்பட்ட பாரிய
ஆயுதங்கள், இரசாயனக் குண்டுகளினால்
வெளிவந்த அணுக் கதிர்களின் தாக்கத்தினால் புற்றுநோய்த் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக
மருத்துவ ஆய்வுகள் முலமாக தெரிய வருந்துள்ளதாக மருத்துவர்கள்
தெரிவிக்கின்றனர். புற்றுநோயினால் வடக்கு மாகாணத்தில்
வயது வேறுபாடின்றி அதிகமானோர்
பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. நீண்ட காலமாக இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அதன் தாக்கத்தின் வீரியத்தை உணராது வாழ்ந்து வந்துள்ளனர். இந்நோய்த் தாக்கத்துடன் இன்னும் பலர் வாழ்ந்து வரலாம் என அஞ்சப்படுகின்றது. புற்றுநோய்த் தாக்கம் ஏற்பட்டால் ஆரம்பத்தில் அதற்கான சிகிச்சையைப் பெறுவதன் முலம்
அதனைத் தீர்த்துக் கொள்ள முடியும். ஆனால் அதிகமானோர் நோயின் தாக்கம் முற்றிய பின்னரே சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குச்
செல்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. வடக்கில் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கும்
இந்நோய்த் தாக்கம் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இது மாத்திரமின்றி புகைத்தல், போதைப் பொருள் பாவனை போன்றவற்றாலும் புற்றுநோய் ஏற்படுகின்றதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இறுதி யுத்தத்தின் பின்னர் வன்னியில் பலர் காசநோயினாலும் பாதிக்கப்பட்டமை மருத்துவ பரிசோதனைகள் முலம்
கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments