![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkzsPoahawf2j4zdMi6FchYaruejf36uU7pScc2BmUtaGZeYRNgd62HIC6AzEqcaDFuDBzrn-xNuVfs_zUngySxZY-cQuJW3QXCE7wmEFIFKbmqVkVPyT3QYr-upT1iDTd4gqpGXsp_-hM/s320/sandiya-ekneligoda2-300x2181-300x130.jpg)
பிரான்ஸில் மறைத்து வாழ்ந்து வருவதாகவும் தான் அவருடன் தொடர்பிலிருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ கூறியுள்ளது தொடர்பில் விவாதம் நடத்துவதற்கே அவர் இவ்வாறு பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் அருந்திக்க பெர்னாண்டோ எம்.பி.யின் உரையை கேட்டதன் பின்னர் தான் எம்.பியை தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்வதற்கு பலமுறை முயன்றதாகவும், அவரது தொலைபேசி தொடர்ந்தும் துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் திருமதி எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.
எக்னெலி கொட பிரான்ஸில் இல்லை என்பதனை பிரான்ஸ் தூதரகம் உறுதி செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
பிரகீத் எக்னெலிகொடவை பிரான்ஸில் அருந்திக்க பெர்னாண்டோவை அறிமுகம் செய்ததாக கூறப்படும் ஊடகவியலாளர் மஞ்சுள வெடிவர்தன தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும், அருந்திக பெர்னாண்டோவின் கூற்று உண்மையானது அல்லவென தன்னிடம் அவரும் கூறியதாகவும் திருமதி எக்னெலிகொட தெரிவித்தார்.
தன் கணவன் காணாமல்போயுள்ளது தொடர்பான சர்ச்சையை நவம்பரில் இலங்கையில் நடக்கவுள்ள பொதுநலவாய மாநாட்டிற்கு முன்னரே மழுங்கடிக்கவே அருந்திக்க பெர்னாண்டோ இவ்வாறு கூறினார் என்றும் திருமதி எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் எக்னெலிகொடவுக்கும் எனக்கும் எவ்விதமான பிரச்சினையும் இல்லை எனினும், இவரை போன்றவர்கள் எனது பிள்ளைகளின் வாழ்க்கையை அழிக்கின்றனர் இதனை நான் அனுமதிக்கமாட்டேன் என்றும் அவர் கூறினார்.
No comments
Post a Comment