Latest News

June 12, 2013

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: ஜெயலலிதா
by admin - 0

தமிழக அரசுக்கு இணக்கமான அரசு மத்தியில் அடுத்த ஆண்டு அமையும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் வைர விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை உயர்திறன் மையமாக அங்கீகரிக்க மத்திய அரசுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில் அதற்கான அனுமதி இன்னும் கிடைத்தபாடில்லை என்றார்.

அப்படி கிடைக்கவில்லை என்றாலும் கூட, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்குப் பின் தமிழகத்திற்கு இணக்கமான ஆட்சி மத்தியில் அமையும். அப்போது இந்த மருத்துவமனை உயர்திறன் மையமாக அங்கீகரிக்கப்படும் என்று மருத்துவமனை இயக்குநர் சாந்தாவிற்கு உறுதி அளிப்பதாக முதலமைச்சர் கூறினார்.
« PREV
NEXT »

No comments