பொறுப்பான அமைச்சர்
மேர்வின் சில்வா, அண்மைக்காலமாக சிறுநீர் அருந்தி வருவதாக சிங்களப்
பத்திரிகையொன்று இன்று முக்கிய
செய்தியாக வெளியிட்டுள்ளது. இந்திய ஆயுர்வேத வைத்தியர்களின்
ஆலோசனைப்படி தினமும் பலதடவைகள் அவர் தனது சிறுநீரை அருந்தி வருவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனது ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்
கொள்ளும் நோக்கில் இதனை மேற்கொண்டு வருவதாக அவர்
தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத்
தெரிவித்துள்ள அமைச்சர் மேர்வின் சில்வா,
இந்திய முன்னாள் பிரதமர்
மொரார்ஜி தேசாயும் இவ்வாறு தனது சிறுநீரை அருந்தியதன் மூலம் ஆரோக்கியத்தைப் பேணிக் கொண்டதாக தெரிவித்துள்ளார். எனினும் தான் சிறுநீருடன் சிறிதளவு தண்ணீர்
கலந்தே அருந்தி வருவதாகவும், கடந்த சிலநாட்களாக தனது ஆரோக்கியத்தில்
குறிப்பிடத்தக்க மாற்றம் தென்படுவதாகவும்
சிலாகித்துள்ளார்.
No comments
Post a Comment