Latest News

June 21, 2013

ஊடகங்களின் தேவை அவசியமான காலம் இது; யாழ்.பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி
by admin - 0

"ஊடகத்தின் தேவை அவசியமான காலகட்டம் இது. இதனூடாக சாதிக்க முடிவது ஏராளம் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப் பீடாதிபதி பேராசிரியர் வி.பி.சிவநாதன் தெரிவித்தார். நேற்று முன்தினம் யாழ்.பல் கலைக்கழகப் பொருளியற்துறை மண்டபத்தில் கிறிஸ்தவ நாகரிகத்துறை மாணவன் ஜே.எஸ்.ராஜ்ஜின் "உயிர்த்தெழும் வலிகள்' கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: பல்கலைக்கழக பாடப் பரப்பினைக் கடந்து மாணவர்கள் கவிதை நூல் வெளியிடுவது அவர்களின் சமூகப் பொறுப்பினை எடுத்துக் காட்டுகின்றது. அதன் ஒரு கூறுதான் இன்றைய "உயிர்த்தெழும் வலிகள்'. பல்கலைக்கழகம் ஆரம்பித்த காலத்தில் பல்கலை சமூகத்தினர் கூடி சமூகம் பற்றிக் கலந்துரையாடுவோம். அந்த நிலைமை இன்றும் உள்ளது மகிழ்வான விடயம். பொறுப்புணர்வோடு வெளிவந்துள்ள ராஜ்ஜின் கவிதைகள் கனவல்ல. இவை சாட்சியங்கள். இந்தக் கவிதைகளுக்கு வலி அதிகம். எனவே மாணவன், கவிஞன், ராஜ் எழுதிய கவிதை வரிகள் சமூகத்துக்குப் போய்ச் சேரும். தூங்குகின்றவர்களை தட்டி எழுப்பும் என்பதில் சந்தேகம் இல்லை.என்றார். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத் துறைத் தலைவரும் சிரேஷ் மாணவ ஆலோசகரான பேராசிரியர் புஸ்பரட்ணம் உரையாற்றுகையில்: "கவிஞன் வாழும் கால கட்டத்தின் அனுபவங்கள் துன்பம், துயரம், சவால், தோல்வி, வெற்றியின் விளைவே அவர்களின் கவிதைகள். "உயிர்த்தெழும் வலிகள்' பலவற்றைச் சொல்லி மனதில் தங்குகின்றது. கவிதைகள் எதிர்காலத்துக்கு கடந்த காலத்தைக் கொடுப்பதாக அமைகின்றன. எதிர்காலத்தில் கவிஞர்கள் இல்லாவிடினும் அவர்களது கவிதைகள் நிலைக்க வேண்டும். கவிதைகள் சமகாலத்தைப் பிரதிபலிக்க வல்லன. படைப்பு பாராட்டத்தக்கது'' என்றார். இந்த நிகழ்வில் சட்டத்துறைதுறைத் தலைவர் கலாநிதி கலாமணி, தமிழ்த்துறை பேராசிரியர் ரகுநாதன், மாணவர்கள் உட்பட இலக்கிய ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=706152117721609143#sthash.X0tOY4UV.dpufம்
« PREV
NEXT »

No comments