Latest News

June 07, 2013

பிரகீத் எக்நெலிகொட தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன: கெஹலிய
by admin - 0

லங்கா ஈ நியூஸ் இணைய தளத்தின் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஊடக
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் தரப்பினர் இது தொடர்பான
விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பிரான்ஸின் ஏதோ ஓர் இடத்தில்
எக்நெலிகொடவை சந்தித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ தம்மிடம்
கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், எந்த இடம் என்பதனை நினைவுபடுத்த முடியவில்லை என அருந்திக்க தம்மிடம்
கூறியதாக அமைச்சர் கெஹலிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளியிடும் கருத்துக்கள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்ய
முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறு விசாரணை செய்வது பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமைகளை மீறும் வகையில் அமையும் என அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் பிரகீத் தொடர்பில் தொடர்ந்தும்
விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.அப்போ தமிழ் தேசிய கூட்டனைப்பின் எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களின் அவர்கள் வெளியிட்ட கருத்துகளுக்காக நாலாம் மாடியில் விசாரித்தது என்ன சொல்லுறீங்கள் 
« PREV
NEXT »

No comments