Latest News

June 04, 2013

தேங்காய் துருவியால் தாக்கி தந்தையைக் கொன்ற மகன் - கிளிநொச்சியில் சம்பவம்
by admin - 0

தந்தையின் அறிவுரையைக் கேட்க மறுத்தும், ஆத்திரமும் அடைந்த மகன் தேங்காய் துருவியால்
தாக்கியதில் தந்தை உயிரிழந்துள்ளார். இரண்டு வருடங்களாக புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள்
போராளி ஒருவரே இவ்வாறு தனது தந்தையை தாக்கிக் கொலைசெய்துள்ளார். இந்த பரிதாபச் சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கொலையாளி என
சந்தேகிக்கப்படும் 20 வயதான மகனை கிளிநொச்சி பொலிஸார் கைதுசெய்துள்ளனர். புனர்வாழ்வை முடித்துக்கொண்டு வீடுதிரும்பிய
தனது மகனுக்கு அவரது தந்தை ஆலோசனை வழங்கியதால் கோபமடைந்த மகன், தேங்காய்
துருவியால் தந்தையின் தலையில் பலமுறை பலமாகத் தாக்கியதில் அவர்
உயிரிழந்துள்ளது விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. சந்தேக நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
« PREV
NEXT »

No comments