இலங்கை மற்றும் இந்தியாவுக்குச் செல்லும் ஈழத் தமிழர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவருவதால் அவர்கள் அன்நாடுகளுக்கு செல்வது தொடர்பாக பிரித்தானியா பயண எச்சரிக்கை விடுக்கவேனும் என்று கலாநிதி அருச்சுனா அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 29ம் திகதி கொழும்பில் இருந்து இந்தியா சென்ற ஈழத் தமிழ் தம்பதிகள் சென்னையில் கடத்தப்பட்டார்கள். பின்னர் தமிழகப் பொலிசாரின் அதிரடி நடவடிக்கையால் அவர்கள், திடீரென மீட்க்கப்பட்டார்கள். இதில் பிரித்தானியப் பொலிசாரின் பங்கும் உண்டு. பிரித்தானியாவின் ஆழும் கட்சியான கான்சர்வேட்டிவ் கட்சியின் முக்கிய பிரமுகரான, கலாநிதி அருச்சுணா சிவநாதனே மேற்கண்டவாறு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார் என அதிர்வு இணையம்
அறிகிறது. இச் சம்பவத்தை தொடர்ந்து அவர் பிரித்தானிய வெளியுறவுத்துறையுடன் தொடர்புகொண்டு பயண எச்சரிக்கை தொடர்பாகப் பேசியுள்ளார். சமீபத்தில் கோவில் திருவிழா ஒன்றுக்குச் சென்ற ஈழத் தமிழர் ஒருவர் இலங்கைப் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டர். அதுமட்டுமல்லாது இவ்வாறு செல்லும் பல தமிழர்கள் இலங்கையில் காணாமல் போவதும் உண்டும். தற்போது இந்தியாவிலும் இதுபோன்ற செயல்கள் அதிகரித்துள்ளன. எனவே இலங்கை செல்லும் ஈழத் தமிழர்களுக்கும் மற்றும் வெளிநாட்டவர்களுக்கும் பயண எச்சரிக்கை விடுக்கப்படவேண்டும் என்று அருச்சுணா கோரிக்கை விடுத்துள்ளார். இதனை பிரித்தானிய வெளியுறவுத்துறையினர் ஏற்றுக்கொண்டால், இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு அது பெரும் ஆபத்தாக அமையலாம் என அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
www.athirvu.com
No comments
Post a Comment