Latest News

June 11, 2013

சிறுவன் பாலச்சந்திரனின் தியாகம் நிறைந்த பரிதாப காட்சிகள் படமாகிறது
by admin - 0

சிங்கள அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட பாலகன் பாலச்சந்திரனின் ஒளிப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து சுமார் 48 வருடங்களுக்கு பிறகு தமிழகம் கொதிநிலைக்கு சென்றது. இதனைத் தொடர்ந்து தமிழகம் எங்கும் மாணவர்களின் போராட்டங்கள் தீவிரமடைந்தது. இந்த போராட்டத்தின் ஒரு அங்கமாக தனி ஈழத்துக்காக பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்திய தமிழக மாணவர் போராட்டம் பற்றிய ‘அறப்போர்’ ஆவணப்படம், பிரிட்டன், ஜெர்மன், ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளில் ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்ச் சப் டைட்டிலுடன் வெளிவர இருக்கிறது .


அது பற்றி இயக்குனர் வே.வெற்றிவேல் அவர்கள் தெரிவிக்கையில்,

தமிழர்களின் அரசியலும், பொதுவாழ்வும் சீர்குலைந்து கிடக்கின்ற நேரத்தில் இன்றைய இளைய தலைமுறை அது பற்றி கண்டுகொள்ளாமல் இருக்கிறதே என்கிற ஆதங்கம் சமூக ஆர்வலர்களுக்கு இருந்தது.

வீட்டில் இருந்து பேருந்தில் எடுத்துச் செல்லப்பட்டுஇ மாலை மீண்டும் அதே கல்லூரி பேருந்தில் வீடுகளுக்கு கொண்டுவிடப்பட்ட மாணவ மாணவியர் தங்களுடைய எதிர்காலம் பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்கள்; தங்களுடைய வருமானம், வளமான வாழ்வு பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள் என்கிற கவலை மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கும் கடந்த தலைமுறைக்கு இருந்தது.

அவற்றையெல்லாம் முழு பொய், தவறான நிலைப்பாடு என்று உறுதி செய்து, ‘இல்லை, நாங்கள் விழிப்புணர்வோடுதான் இருக்கிறோம். தமிழ் இனத்தின் உடைய பிரச்சனைகளில் கவனமாக இருக்கிறோம்’ என்பதை தெள்ளத் தெளிவாக கோடிட்டு, அற்புதமாக – தமிழகம் எங்கும், ஒரு மாபெரும் அறப்போராட்டத்தினை, நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மாணவர் போராட்டம் எந்த ஒரு நிலையிலும், தன் நிலையில் இருந்து மாறாமல், கடுகளவும் வன்முறைக்கு இடம் கொடுக்காது, மிகவும் பொறுப்புணர்வுடன் சிறந்த முதிர்ச்சியான பேச்சுகளோடும், எழுச்சியோடு நடந்திருக்கிறது. 1965 க்குப் பின் நடந்த போராட்டங்களில் இது வெற்றிப் போராட்டம். இது இன்னும் பரவும்! அடுத்த கட்டங்களை அடையும்!!

தமிழ் இனத்தின் திருப்பு முனையாக அமைந்த மாணவர் நடத்தி வரும் அறப்போரினை அலசுகிறது இந்த ஆவணப்படம்.

விரைவில் சந்திப்போம்….
இவண்…
வே.வெற்றிவேல் சந்திரசேகர்.
« PREV
NEXT »

No comments