ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தமிழில் வெளியான கஜினி படம், ஹிந்தியிலும் வெளியானது. அப்படத்தில் தமிழில் நயன்தாரா வேடத்தில், ஹிந்தியில் ஜியாகான் நடித்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் ஹிந்தி நடிகை ஜியா கான் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இத்தகவல் வெளியான போது, சிலர் கஜினி படம் என்றவுடன் நயன்தாராவாக தான் இருக்கும் என நினைத்து கொண்டு பேஸ்புக், டுவிட்டரில் செய்தி பரப்பி விட்டார்களாம்.
இதனால் கேரளாவில் உள்ள நயன்தாராவின் பெற்றோரும், உறவினர்களும் பலத்த அதிர்ச்சியடைந்தார்களாம். அதனால் உடனடியாக நயன்தாராவுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டுள்ளனர்.
ஆனால், ஆந்திராவில் அனாமிகா படப்பிடிப்பில் இருந்த நயன்தாராவுக்கு சரியாக லைன் கிடைக்காமல் போக அவர்களின் அதிர்ச்சி இன்னும் அதிகமானதாம்.
அரை மணி நேரத்துக்குப் பின்பு நயன்தாரா லைனில் கிடைத்த போது, நான் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ளவில்லை. அப்படி கோழைத்தனமாக சாகவும் மாட்டேன் என்று சிரித்துக் கொண்டே சொன்னாராம்.
அதன் பின்பு தான் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்கள் அவரது பெற்றோர். அதையடுத்து, நயன்தாராவின் டுவிட்டரில் தற்கொலை செய்து கொண்டது ஹிந்தி கஜினி படத்தில் தமிழில் நயன்தாரா நடித்த வேடத்தில் நடித்த ஜியாகான் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
No comments
Post a Comment