Latest News

June 12, 2013

இலங்கை மீதான அடுத்த நடவடிக்கை என்ன?உன்னிப்பாக அவதானிக்கிறது அமெரிக்கா அவதானிப்பு மட்டுமா?
by admin - 0

இலங்கை மீதான அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாக, ஐநாவில் போர்க்குற்றங்களை கையாளும் அமெரிக்க தூதுவர்  ஸ்டீபன் ஜே ராப் தெரிவித்துள்ளார்.
நேற்று செவ்வாயக்கிழமை நியூயோர்க்கில் ஐ.நா செயலகத்தில் உத்தியோகபூர்வ ஊடகமான இன்னர் சிற்றி பிரஸ் செய்தியாளருக்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுவது தொடர்பாக இன்னர் சிற்றி பிரஸ், ஸ்டீபன் ராப்பிடம் கேள்வி எழுப்பியிருந்தது.
அதற்குப் பதிலளித்த ஸ்டீபன் ராப்,

இலங்கையில் போரின்போது இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பாக பொறுப்புக் கூறப்படாதது, மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாதது குறித்த எமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்காவினால் இரண்டு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
தற்போது ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவிபிள்ளை இலங்கைக்கு செல்லத் திட்டமிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்துடன் உள்ள இடைவெளிகளை நிரப்புவதற்காக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் சிறப்பு பிரதிநிதிகளை ராஜபக்ச அரசுடன் இணைந்து செயற்படும் படி கடைசியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கோரியுள்ளது.
தேவையான அடுத்த நடவடிக்கைகளை எடுப்பது குறித்து முடிவு செய்வதற்கு, அமெரிக்கா மிக உன்னிப்பாக  அவதானம் செலுத்தி வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments