Latest News

June 12, 2013

தலிபான்களுடன் பேசித்தான் ஆகவேண்டும்- அடங்கியது நேட்டோ
by admin - 0

தலிபான்களுடன் ஏதோ ஒரு கட்டத்தில் பேசித்தான் ஆகவேண்டும்
என்று ஆப்கானிஸ்தானில் நேட்டோ சர்வதேசப்படையின் இறுதி நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் அமெரிக்க ஜெனரல் கூறியுள்ளார். அடுத்த வருடத்தில் நேட்டோவின் தாக்குதல் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய பின்னர், ஆப்கானிஸ்தான்
படைகளுக்கு ஆதரவு வழங்குவதை சர்வதேசப் படைகள் தொடர வேண்டும்
என்று ஜெனரல் ஜோசப் டண்ஃபோர்ட் அவர்கள் பிபிசியிடம் கூறியுள்ளார். அப்படியான ஆதரவு இல்லாவிட்டால், ஜனநாயக ரீதியாகவும், பெண்கள்
உரிமைகள் தொடர்பிலும் பெறப்பட்ட முன்னேற்றங்கள் அங்கு பின்னடைந்து போய்விடும் என்றும் அவர் கூறினார். ஒரு நாடாக ஆப்கானிஸ்தான் முன்னேறுவது என்பதற்கான உறுதி எதுவும்
இருக்கவில்லை என்றும் அவர் கூறினார். நேட்டோ சர்வதேசப் படைகளின் இறுதி தளபதியாக இவர் செயற்படுகிறார். அடுத்த வருட இறுதியில் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில்
இருந்து முழுமையாக வெளியேறும்வரை அவர் இந்தப் பதவியில் இருப்பார்
« PREV
NEXT »

No comments