Latest News

June 03, 2013

சீதைக்கு ஆலயமா? இராவணனுக்கே முதலில் அமைக்க வேண்டும்!- ராவணா பலய அமைப்பு எதிர்ப்பு
by admin - 0

நுவரொலியா மாவட்டத்தில்
ஹக்கலை – திவுரும்பொல
பிரதேசத்தில் சீதைக்கு ஆலயம் அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள
திட்டத்திற்கு ராவணா பலய
அமைப்பு எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. அந்த அமைப்பின் இணைப்பாளர்
இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இந்த
ஆட்சேபனையை வெளியிட்டுள்ளார். சீதை அம்மனுக்கு ஆலயம்
அமைக்கப்படுவதற்கு முன்னர் இராவண
மன்னனுக்கு சிலையொன்று நிறுவப்பட
வேண்டும். இராவண மன்னன் வரலாற்றுடன்
எமக்கு முக்கியமான ஒருவர், இராவணனால்தான் சீதை பத்தினி என்ற பெயரை பெற்றார். இராவணன் சீதை பலவந்தப்படுத்தியிருந்தால்
அவர் அந்த தகுதியை பெற்றிருக்க மாட்டார். பல வருடங்களாக சீதையை சிறைவாசம் வைத்திருந்தாலும் அவருக்கு ராவண மன்னன் இடையூறு விளைவித்ததில்லை. எனவே, இராவணன்
ஒரு கொள்கையை கடைபிடிப்பவர்
என்று புலப்படுவதால், முதலில்
அவருக்கே ஆலயம் அமைக்கப்பட வேண்டும். பாரதீய ஜனதா கட்சியின் அதிகாரம் கொண்ட இந்திய மத்திய பிரதேஷ் பிராந்தியத்தின்
முதலமைச்சர் சிவராஜ் சிங்க சௌவான்,
இலங்கையில் சீதை அம்மையாருக்கு ஆலயம் அமைக்க வேண்டும் என்று அண்மையில் தெரிவித்த கருத்துக்கு அமையவே ராவணா பல அமைப்பு தமது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ள எதிர்வரும் தேர்தலில் தாம் வெற்றிபெற்றால்
நிச்சயமாக சீதையம்மனுக்கு தேவாலயம்
அமைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய பிரதேஷ் முதலமைச்சர் தெரிவித்தார். இலங்கை அரசாங்கத்தின் அனுமதியுடன்
தயானந்த் நிதியத்தின் ஊடாக சீதையம்மன்
ஆலயம் அமைக்கப்படும் என்றும் அவர்
குறிப்பிட்டிருந்தார். இதேவேளை,
பசுக்கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து புறக்
சத்தியாக்கிரகம் மற்றும் உணவுத்
தவிர்ப்பு போராட்டத்தில்
ஈடுபடுவதற்கு சிங்கள ராவய
அமைப்பு தயாராகின்றது. கால்நடைகளை பலியிடுவதை தடுத்து நிறுத்த
நோக்கிலேயே இந்த போராட்டம்
நடத்தப்படவுள்ளதாக அந்த அமைப்பின்
ஏற்பாட்டாளர் அக்மீமன தயாரத்தன தேரரர்
தெரிவித்தார். பௌத்த பிக்கு ஒருவர் அண்மையில் கண்டி தலதா மாளிகையில்
தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டமை சமூகத்தில் மீண்டும் கருத்தாடல்கள்
இடம்பெற்று வருகின்றன. இந்த சம்பவத்தை அடுத்து இலங்கையில் குடியியல் அமைப்புகள் கால்நடை பலியிடல் மற்றும் பசுக்கொலைக்கு எதிராககுரலெழுப்புவதுடன்,
அதனை தடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறது இராவணன் ஒரு தமிழ் சிவபக்த அரசன் என்பது குறிப்பிடத்தக்கது 
« PREV
NEXT »

No comments