Latest News

June 07, 2013

பிபிசி தலைமைமையகத்தை மகாராணி திறந்து வைத்தார்
by admin - 0

பிபிசியின் மீளக்கட்டியமைக்கப்பட்ட தலைமை அலுவலகத்தை எலிசபெத்
மகாராணியார் இன்று அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வுக்காக லண்டனின் மையப்பகுதியில் இருக்கின்ற
''நியூ புரோட்காஸ்டிங் ஹவுஸ்'' என்னும்
எமது தலைமை அலுவலகத்துக்கு வந்திருந்த மகாராணியார், இங்கு நடந்த
ஒரு இசைக்கச்சேரியின் நேரடி ஒலிபரப்பை கேட்டு ரசித்ததுடன்,எமது செய்தி தயாரிப்பு அறைகளுக்கும் விஜயம் செய்தார். அதன் பின்னர் பிபிசி வானொலியின் கலையகத்துக்கும் அவர் வருகை தந்தார். அங்கு நேரலையில் உரையாற்றிய மகாராணியார், இந்த நிலையம்,
எதிர்காலத்தில் பிபிசியின் பணிகளுக்கு மிகவும் சிறப்பாகச் சேவையாற்றும்
என்று நம்புவதாகக் கூறினார்.  
அத்துடன் அதனை அதிகாரபூர்வமாக திறந்து வைப்பதாகவும் அவர் அறிவித்தார். தனது கணவர் இளவரசர் பிலிப் சுகவீனமுற்று லண்டன் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருக்கின்ற போதிலும், மகாராணியார் தனது ஏற்கனவே திட்டமிட்ட பணிகளை தொடர்ந்தும் செய்துவருகிறார். அடுத்த வாரம் தனது 92வது வயதில் காலடி எடுத்து வைக்கவிருக்கும் இளவரசர் பிலிப் அவர்கள் இரு வாரங்கள் வரை மருத்துவமனையில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
bbc.com/tamil
« PREV
NEXT »

No comments