Latest News

June 12, 2013

BBC இம்பக்ட் நிகழ்ச்சியில் இலங்கை குறித்து கடும் விவாதம் இலங்கையில் மாநாடு நடக்கக்கூடாது -கனேடிய அதிகாரி
by admin - 0

சர்வதேச தொலைக்காட்சியான BBC ல் , ஒளிபரப்பாகும் நிகழ்சிகளில் மிகவும் பிரபல்யமானவை, ஹாட் -டாக்(HARD TALK), மற்றும் இம்பக்ட்(IMPACT) நிகழ்சிகளே ஆகும். கடந்த சில தினங்களுக்கு முன்னர் BBC இம்பக்ட் நிகழ்சியை மிஷைல் ஹுசைன் நடத்தியிருந்தார். இதில் கனேடிய அதிகாரி, "இறந்தவர்கள் இன்னும் கணக்கெடுக்கப்படுகிறார்கள்" என்ற புத்தகத்தை எழுதிய முன் நாள் BBC ஊடகவியலாளர் பிரான்சிஸ் கரிசன், மற்றும் இலங்கையில் கொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்தவின் சகோதரர் ஆகியோர் இன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இலங்கையில் காமன்வெலத் மாநாடு நடத்தப்படவேண்டுமா என்ற கருப்பொருளில் இன் நிகழ்ச்சி அமைந்திருந்தது. முதலாவதாகப் பேசிய கொல்லப்பட்ட லசந்தவின் சகோதரர், மாநாடு இலங்கையில் நடப்பது நல்லது என்ற பொருட்படப் பேசியிருந்தார். இருப்பினும் கனேடிய அதிகாரி அதனை மறுத்து, இலங்கையில் மாநாடு நடக்கக்கூடாது என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய ஊடகவியலாளர் பிரான்சிஸ் கரிசன் அவர்கள், தான் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சுமார் 30 தமிழர்களை பிரித்தானியாவில் சந்தித்தாகத் தெரிவித்தார். அவர்கள் அனைவரும் இலங்கை இராணுவம் மற்றும் பொலிசாரால் பல கொடுமைகளுக்கு உள்ளானவர்கள் என்று அவர் தெரிவித்தார். இலங்கையில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் லசந்தவின் சகோதரர் பேசும்போது, இலங்கையில் இம் மாநாடு நடைபெற்றால் அதனூடாக இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்திருந்தார். இக் கருத்தை மறுத்த பிரான்சிஸ் கரிசன் அவர்கள் இம் மாநாடு இலங்கையில் நடந்தால் அது இலங்கைக்கு ஒரு அங்கிகாரத்தையே கொடுக்கும். மற்றும் அவர்கள் புரிந்த மனித உரிமை மீறல்களை அது நியாயப்படுத்தும் என்றும் அவர் மேலும் கூறினார்.(காணொளி இணைக்கப்பட்டுள்ளது)




புதிய போர் குற்ற ஆதார வீடியோ -வெள்ளைக்கொடியுடன் வந்தவர் என்ன ஆனார்




« PREV
NEXT »

No comments