Latest News

May 11, 2013

தன் மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலுக்கும் புலிகளுக்கும் தொடர்பில்லை ! பொன்சேகா அதிரடி
by admin - 0

2007 ஆம் ஆண்டு கொழும்பில் தன் மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பாக
அன்றைய இராணுவத் தளபதியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத்
பொன்சேகா சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளதாக இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரின்
ஆலோசனையின்படி தன் மீது அந்த தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக
பொன்சேகா கூறியுள்ளார். குண்டு தாக்குதல் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காக புலனாய்வுப் பிரிவின்
அதிகாரி ஒருவர் பொன்சேக்காவை தொடர்பு கொண்ட போதே அவர்
இதனை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறே அந்த தொலைபேசி உரையாடல் நடந்துள்ளது. அதிகாரி – பொன்சேகா அவர்களே உங்கள் மீது நடத்தப்பட்ட குண்டுதாக்குதல் குறித்து சந்தேகிக்க கூடிய எவராவது உள்ளனரா?. பொன்சேகா – ஆம்… ஆம் அறிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றதா?. அதிகாரி – இந்த தாக்குதலுடன் விடுதலைப்புலிகளுக்கு தொடர்பு இருப்பதாக நம்புகிறீர்களா?. பொன்சேகா - விடுதலைப்புலிகள் அந்த காலத்தில் காட்டில் இருந்தனர். அவர்களை காட்டுக்குள் நான் மட்டுப்படுத்தி வைத்திருந்தேன். அதிகாரி – இந்த தாக்குதல் குறித்து நீங்கள் சந்தேகிப்பது பிரபாகரனையா? பொட்டம்மானையா?. பொன்சேகா – நான் ஒரு தடவை கூறினேன்.. அவர்கள் காட்டில் உள்ளனர் என்று. அதிகாரி – அப்படியென்றால் விடுதலைப்புலிகளில் நீங்கள் யாரை சந்தேகின்றீர்கள்?. பொன்சேகா - எனக்கு விடுதலைப்புலிகளில் உள்ள எவர் மீதும் சந்தேகமில்லை. இதில் சந்தேக நபர்கள் இல்லை. இதனை ஜனாதிபதியும் கோத்தபாயவுமே செய்தனர். நாட்டின் அதிஷ்டம் நான் உயிர் தப்பினேன். இல்லை என்றால் இவர்கள் இன்னும் யுத்தம் செய்து கொண்டிருப்பார்கள். யுத்தம் செய்வது மாத்திரமல்ல அதனை விற்று திண்பார்கள். யுத்தத்தை நான் முடிவுக்கு கொண்டு வந்து விடுவேன் என்று இவர்கள் அப்போதிருந்தே பயத்தில் இருந்தனர். அது அவர்களுக்கு நஷ்டம். பொன்சேகாவின் கருத்துக்களை அடுத்து அந்த அதிகாரி எதனையும் பேசாது மௌனமாக இருந்துள்ளார். பொன்சேகா - வேறு என்ன தெரிந்து கொள்ள வேண்டும்?. அதிகாரி – இல்லை சார் இந்த விடயம் சம்பந்தமாக உங்களிடம் வாக்குமூலத்தை பெற வேண்டும் என எனக்கு உயர் மட்டத்தில் இருந்து உத்தரவு வந்தது. அதுதான் உங்களிடம் பேசினேன்.
நீங்கள் வாக்குமூலத்தை வழங்க முடியுமா?. பொன்சேகா – ஆம், முடியும். ஆனால் நான் கூறுவதை அப்படியே எழுதி கொள்ள வேண்டும். பின்னர் மாற்றங்கள் செய்யக் கூடாது. அதனை ஏற்றுக்கொண்டால்,
எப்போது வேண்டுமானாலும் எனது அலுவலகத்திற்கு வரலாம் என
பொன்சேகா கூறியுள்ளார்.
« PREV
NEXT »

No comments