Latest News

May 03, 2013

சிலம்பம்-- தமிழர்களின் தற்காப்புக் கலை
by admin - 0

மக்கள் தம்மை சிங்கம், புலி போன்ற விலங்குகளிடம்
இருந்து காத்துக்கொள்ளக் கையாண்ட
முறையே சிலம்பம் எனப்படும் கலையாக
வளர்ந்துள்ளது என்பர். தமது கைகளில் எப்போதும்
இருக்கக் கூடிய சிறிய ஆயுதங்களான கம்பு (தடி),
சிறு கத்தி, கோடரி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி விலங்குகளிடம்
இருந்து தற்காத்துக்கொள்ள இந்தக் கலையைப்
பயன்படுதினர்.
தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்த
காலத்தில் முதலில் எடுத்தது கம்பு எனப்படும்
ஆயுதமே ஆகும். இதுவே பின்னர் சிலம்புக் கலையாக வளர்ச்சி பெற்றது. ஆதிகாலத்தில்
மனிதர்கள் சண்டை செய்ய ஈட்டி, கத்தி, வேல், வாள்,
கம்பு போன்ற பலவிதமான ஆயுதங்களைப்
பயன்படுத்தினர். அவற்றுள் மிகவும் பழமை வாய்ந்த
ஆயுதம் கம்பு எனப்படும் 'சிலம்பு' ஆகும்.
முற்காலத்தில் இக்கலையை வீர மறவர்கள் பயன்படுத்தினர். தற்போது இது ஒரு சில
பள்ளிகளிலும், தனியார் அமைப்புகளாலும் கற்றுத்
தரப்படுகிறது. விளையாட்டுப் போட்டிகளில் வீர
விளையாட்டாகவும் இடம்பெறுகிறது. சிலம்பச் சுவடிகளில் குறிப்பிடப் படும்
தொன்மையான சிலம்பச் சுவடு மற்றும்
அடி வரிசைகள், தமிழக மூவேந்தர்களின்
ஆட்சி முடிவுற்று, தமிழகம் அன்னியர்களுக்கு
அடிமைப்பட்ட பின் கால மாற்றத்தால் அதன்
பெயர்களும் ஆடும் முறைகளும் சிறு மாற்றமடைந்தன. வடக்கன் களரி, தெக்கன் களரி,
சுவடு அடி முறை, கர்நாடகச் சுவடு, சிரமம்,
சைலாத், தஞ்சாவூர் குத்து வரிசை,
நெடுங்கம்பு என்ற பெயர்களில் இன்றும் தமிழகம்
மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில்
ஆடப்பட்டு வருகின்றன. -சிலம்பம் பற்றிய ஆய்வுகள்- சிலம்பக் கலை பற்றிய அகழ்வாய்வுச் சான்றுகள் மிகத்
தொன்மையானவை. கி.மு.2000க் கும் முற்பட்ட
ஆதிச்ச நல்லூர் அகழ்வாய்வில், 32 வகையான சிலம்ப
ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவை சென்னை அருங்காட்சியகத்தில்
வைக்கப்பட்டுள்ளன. பிரிட்டனில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் எகிப்திய போர் வீரர்கள்
பயன்படுத்திய நான்கு அடி நீளமுள்ள
கம்பு வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த கம்பினைப்
பயன்படுத்திய முறை சிலம்பத்தை ஒத்திருப்பதால்
தமிழக எகிப்திய கலாச்சாரப் பரிமாற்றத்தின்
ஒரு பகுதியாக சிலம்பக்கலையும் பரவியதாக கருதப்படுகிறது. -பெயர் தோற்றம்- சிலம்பம் என்ற பெயர் சிலம்பு என்ற வார்த்தையில்
இருந்து உருவானது. சிலம்பு என்பதற்கு ஒலித்தல்
என்று பொருள். சிலம்பம் ஆடும்
பொது உருவாகும் ஒலிகளை குறிக்கும் விதமாக
சிலம்பம் என்ற பெயர் சூட்டபட்டதாகச்
சொல்லபடுகிறது. "சிலம்பம்' என்ற சொல் "சிலம்பல்' என்ற வினையின் அடியாகப் பிறந்தது.
மலைப் பகுதிகளில் அருவி விழும் ஓசை,
பறவைகளின் கீச்சொலி, மரங்களின் இலைகள்
காற்றில் அசையும் ஓசை, விலங்குகளின் இரைச்சல்
போன்ற பல ஓசைகள் ஒலித்துக்
கொண்டே இருப்பதால் மலைக்கு, "சிலம்பம்' என்ற மற்றொரு பெயரும் உண்டு. எனவே, மலை நிலக்
(குறிஞ்சி) கடவுளான முருகனுக்கும், "சிலம்பன்'
என்ற பெயருண்டு. கம்பு சுழலும் போது ஏற்படும்
ஓசை மற்றும் ஆயுதங்கள்
ஒன்றோடொன்று மோதும்
ஓசை போன்று இருப்பதால், தமிழரின் தற்காப்புக் கலைக்கு "சிலம்பம்' என்ற பெயர் ஏற்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூருக்கு
மேற்கே உள்ள மலைப் பகுதிகளில் வாழும்
பழங்குடியினருள் "சிலம்பரம்' என்ற பெயரும் வழக்கில்
உள்ளது. -சிலம்பத்தடி- சிலம்பம் ஆட்டத்திற்கான கம்பு அல்லது தடி,
மூங்கில் இனத்தைச் சேர்ந்த சிறுவாரைக் கம்பு, பிரம்பு போன்ற மரங்களில்
இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் சிறுவாரைக் கம்பு என்பது நன்கு வளைந்து கொடுக்கக்கூடியத
ு. சிலம்பத்திற்கான தடி, நிலத்தில் இருந்து ஓர் ஆளின் நெற்றிப் புருவம் வரையான உயரமுடையதாக
இருக்க வேண்டும். சிலம்பத்தில் பல வகைகள் உண்டு. அவையாவன, துடுக்காண்டம்
குறவஞ்சி
மறக்காணம்
அலங்காரச் சிலம்பம்
போர்ச் சிலம்பம்
பனையேறி மல்லு நாகதாளி,
நாகசீறல்,
கள்ளன்கம்பு ஆகியனவாகும்.

« PREV
NEXT »

No comments