தனியார் காணியொன்றில்
எலும்புக் கூடொன்று மீட்கப்பட்டுள்ளதாக இளவாலைப்
பொலிஸார் தெரிவித்துள்ளனர். இளவாலை சீனிப் பந்தல் பிரதேசத்தில்
அமைந்துள்ள தனியார்
காணியொன்றிலிருந்து இன்று மாலை 4.30
மணியளவில் இந்த
எலும்புக்கூடு மீட்கப்பட்டதாக பொலிஸார்
தெரிவித்தனர். காணி உரிமையாளரினால் மலசலகூடம்
அமைப்பதற்கான
குழியொன்று வெட்டும்போதே இந்த
எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டதாக
தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில்
விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக
இளவாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments
Post a Comment