Latest News

May 08, 2013

நீல் ஆம்ஸ்ட்ரோங். இதயத்துடிப்பு ஏலத்தில்
by admin - 0

நிலவில் முதலில் காலடி எடுத்து வைக்கப்பட்டதாக இன்று வரை நம்பப்படுபவர் அமெரிக்காவைச் சேர்ந்த நீல் நீல் ஆம்ஸ்ட்ரோங். இவரை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்து விட முடியாது. அமெரிக்கா நிலவிற்கு செல்லவே இல்லை, ஆம்ஸ்ட்ரோங் அங்கு காலடி எடுத்து வைத்ததெல்லாம் வெறும் நாடகம். இந்நாடகமானது பிரத்தியேக இரகசிய அரங்கில் அல்லது பாலைவனமொன்றில் நடத்தப்பட்ட நாடகம் எனவும் ஆம்ஸ்ட்ரோங் சிறந்த நடிகர் எனவும் குற்றஞ்சாட்டும் ஒரு சாராரும் உள்ளனர். அவர்கள் இதற்காக பல காரணங்களையும் முன்வைத்துமுள்ளனர். எது எவ்வாறு இருப்பினும் நீல் ஆம்ஸ்ட்ரோங்கே முதலில் நிலவில் காலடி எடுத்து வைத்தவராக இன்றளவும் கருதப்படுகின்றார். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த நிகழ்வின் போது எடுக்கப்பட்ட ஆம்ஸ்ட்ரோங்கின் ஈ.சி.ஜி. அறிக்கை (electrocardiogram) ஏலத்தில் விடப்படவுள்ளது. நிலவில் சரியாக முதல் காலடியை ஆம்ஸ்ட்ரோங் பதித்த போது குறித்த ஈ.சி.ஜி. அறிக்கை பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது அவரது இதயத் துடிப்பு சாதாரணமாகவே இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. பதற்றமோ அதனால் இதயத்துடிப்பில் எவ்வித மாற்றமோ ஏற்படவில்லை என இவ்வறிக்கையின் மூலம் தெரியவருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நிவ் ஹெம்ஷயரைச் சேர்ந்த ஆர்.ஆர். என்ற ஏல நிறுவனமே இதனை விற்பனைக்கு விடவுள்ளது. இதன் ஆரம்ப விலையாக 3000 அமெரிக்க டொலர்களை அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. எனினும் குறித்த அறிக்கையானது நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட பல மடங்கு அதிகமாக விற்பனையாகுமென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுமட்டுமன்றி Apollo 11 விண்கலத்துடன் தொடர்புடைய 85 பொருட்கள் ஏலத்தில் விற்பனைக்கு வருகின்றது.
« PREV
NEXT »

No comments