நானுஓயா ரயில் நிலையத்தில் ரயில் தடம் புரண்டதால் மலையகத்திற்கான ரயில் சேவைகள்
பாதிக்கப்பட்டுள்ளன. கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு தபால் ரயில் நானுஓயா புகையிரத
நிலையத்திற்கு அருகில் இன்று வியாழக்கிழமை அதிகாலை தடம் புரண்டதால் ரயில் சேவைகள்
பாதிக்கப்பட்டுள்ளன. ரயில் எஞ்சின் தண்டவாளத்தை விட்டு விலகியதால் ரயில் தண்டவாளத்திற்கும் ரயிலுக்கு நீர்
நிரப்பும் குழாய் கட்டமைப்புக்கும் சேதமேற்பட்டுள்ளதாக
நானுஓயா கட்டுப்பாட்டு அறை தெரிவிக்கின்றது. இதனால் பயணிகளுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை. பயணிகள் நானுஓயா ரயில் நிலையத்தில்
தங்க வைக்கப்பட்டுள்ளனர். திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்கான
நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்தது.
No comments
Post a Comment