

நீண்ட காலமாக யாழ்.பேரூந்து நிலையத்தில் இளம்பெண்களுடனும், பள்ளி மாணவிகள் மற்றும் தனியார் கல்விநிலைய்ம் செல்லும் மாணவிகளுடனும் அங்க சேஷ்டையிலும், பாலியல் ரீதியான வார்த்தைப்பிரயோகங்களும் மேற்கொண்டு வந்த இந்த நபர் பற்றி முன்னாள் யாழ்.மாநகரசபை உறுப்பினரான நிஷாந்தனிடம், பொதுமக்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து ஞாயிறு 05.05.2013 மாலை 04 மணியளவில் நேரில் சென்று அவதானித்த போது , தனியார் கல்விநிலையத்துக்கு வந்த மாணவியிடம் சில்மிஷம் புரிய முற்பட்ட போது நிஷந்தனாலும் பொதுமக்களாலும் கையும் மெய்யுமாக பிடிபட்டு நையப்புடைக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்பு கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். இவரை சோதனை செய்த பொழுது இவரது காற்சட்டைப்பையினுள் ஆணுறை ஒன்றும் கைப்பற்றப்பட்டது. அது பற்றி விசாரித்த போது அதனை தனக்கு நெருக்கமான கடற்படை வீரரே வாங்கி வருமாறு கூறியதாக கூறினான். இது ஒரு ஆரம்பம் மட்டுமே! இவரைப்போல பல ரோமியோக்கள் பற்றிய தகவல்களை மக்கள் வழங்கியுள்ளனர். அவர்களும் இனி வரும் நாட்களில் கடுமையான முறைகளில் கவனிக்கப்படுவார்கள் என்கிறார் நிஷாந்தன் அவரை போல இளையவர்களை விவசாயி இணையம் வரவேற்கிறது
No comments
Post a Comment