.jpg)
இந்த தடுப்புக்காவல் உத்தரவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதவானிடம் இன்று பெற்றுக்கொண்டுள்ளனர்.
இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மோசமடைந்துள்ளது!- ரவூப் ஹக்கீம்
இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மோசமாகியிருப்பதாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வடமாகாண கிளைகளை குறிப்பாக வன்னிப் பிரதேச கிளைகளைப் புனரமைப்பது தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் தலைவராகிய அசாத் சாலி அவர்கள் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணக்கு உட்படுத்தப்பட்டிருப்பதன் மூலம், இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வடமாகாணத்தில் உள்ள சிவில் அமைப்புக்களும் அசாத் சாலி கைது நடவடிக்கையை விமர்சித்துள்ளன. இத்தகைய சூழலில் வடமாகாண சபைக்கான தேர்தல் நல்ல முறையில் நடத்தப்படுமா என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டிருக்கின்றது.
பதிமூன்றாவது திருத்தச் சட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்களை முதன்மைப்படுத்தி அறிமுகப்படுத்தப்பட்ட மாகாணசபை முறைக்கு அமைய, வடமாகாணத்திற்கான தேர்தல் 26 வருடங்கள் கடந்த பின்பும் இன்னும் நடத்தப்படவில்லை.
இத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment