
இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது :
ராஜீவ்காந்தி கொலை வழக்கு படத்துக்கான திரைக் கதையை தற்போது எழுதி முடித்துள்ளேன். இந்தப் படத்தில் அந்த வழக்கு சம்பந்தமான முழு தகவல்களும் இருக்கும்.
ராஜீவை கொலை செய்ய ஒன்பது பேர் கிளம்பி வருவது, ஒரு மாதம் கொலை சதி திட்டம் வகுப்பது, ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்தில் அதனை நிறைவேற்றுவது, பெங்களூர் தப்பிப் போய் தலை மறைவாவது, அதிரடிப் படையினர் அவர்கள் கதையை முடிப்பது என எல்லா தகவல்களுடனும் இந்தப் படத்தின் திரைக் கதையை அமைத்து இருக்கிறேன்.
என்று கூறியிருக்கிறார்.
இந்தப் படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் நசுருதீன்ஷா, சஹானா, தோஸ்பாமி மற்றும் பலர் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
No comments
Post a Comment