மட்டக்களப்பு மாவட்டத்தில் பௌத்த மக்கள் இல்லாததால் ஏற்கனவே இருக்கின்ற புத்தர் சிலைகளை பராமரிப்பதற்கு யாருமே இல்லாத நிலையில் புதிதாக எதற்கு புத்தர் சிலை? இப்பிரதேசத்தில் புத்தர் சிலைகளை அமைத்து புத்தபெருமானை அவமதிக்காதீர்கள் என தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பொன்.செல்வராசா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு நகர நுழைவாயிலில் புத்தர் சிலை அமைக்கப்பட மாட்டாது என
மட்டக்களப்பு 231ஆவது படைப்பிரிவின் பிரிகேடியர் சுதந்த திலகரத்ன உறுதியளித்துள்ளதாக
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார். இன்று மட்டக்களப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மாநகர சபையின் நுழைவாயில் வரவேற்பு வளைவுக்கு அருகில் புத்தர் சிலை அமைக்கும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும்
அதனைக் கண்டித்தும் இன்று புதன்கிழமை காலை மட்டக்களப்பு பிள்ளையாரடி பிரதேச.மக்களினாலும் அவ்வூர் பிரமுகர்களாலும் “அத்துமீறி புத்தர் சிலை வைப்பதற்கு எதிர்ப்புப் பேரணி”
எனும் தொனிப் பொருளிலான மாபெரும் எதிர்ப்புப் பேரணியொன்று இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
No comments
Post a Comment