Latest News

May 29, 2013

புலிகள் சிரேஷ்ட தலைவர்கள் குறித்து விபரங்களை வெளியிட தாம் தயார்
by admin - 0

தமது தடுப்புக் காவலில் உள்ள விடுதலைப் புலிகள், மற்றும் சிரேஷ்ட தலைவர்கள் தொடர்பாக விபரங்களை வெளியிட தாம் தயார் என்று இலங்கை தெரிவித்துள்ளது. இலங்கைக்கான ஐ.நாவின் பிரதிநிதிகளில் ஒருவரான ரவிநாத் ஆரியசிங்கவே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கைப் புலனாய்வுத் துறையினர் இதுவரை சுமார் 3,200 முறைப்பாடுகளைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள ஆரியசிங்க, இதில் 2,729 முறைப்பாடுகளே முறையாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இவற்றுள் 1,101 முறைப்பாடுகள் குறித்து தாம் விசாரணை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மீகுதி முறைப்பாடுகள் கிடப்பில் இருக்கிறது என்பது இவர் கூற்றுவாயிலாக தெரியவருகிறது. இதேவேளை தமது தடுப்பில் உள்ள புலிகள் மற்றும் சிரேஷ்ட தலைவர்கள் குறித்து விபரங்களை வெளியிட தாம் தயார் என்றும் அவர் கூறியுள்ளார். அடிகளார் பிரான்சிஸ் ஜோசப் தலைமையில், முள்ளியாக்காலுக்கு அருகில் சரணடைந்த புலிகளின் பல சிரேஷ்ட தலைவர்கள் நிலை என்ன என்பது தொடர்பாக இலங்கை இராணுவம் இதுவரை மெளனம் சாதித்து வருகிறது. இந் நிலையில் தான் ஆரியசிங்கவின் இக் கூற்றுக்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
« PREV
NEXT »

No comments