Latest News

May 13, 2013

இலங்கைக்கு நாடு கடத்துவதை மேற்குலக நாடுகள் நிறுத்த வேண்டும்: பா.அரியநேத்திரன்
by admin - 0

புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள்  திருப்பி அனுப்புவதை குறித்த நாடுகள் கைவிட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் கனடா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் புகலிட தஞ்சம் கோரிய பலர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட இருப்பதாக அண்மையில் செய்திகள் ஊடகங்களில் வெளியாகி இருக்கின்றன. குறிப்பாக புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட
இலங்கை இளைஞன் குலசேகரம்
கோகுலராஜேஸ் என்ற இளைஞனும்
கனடாவில் இருந்து இவ்வாறு திருப்பி அனுப்பப்பட இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள்
இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால்
அவர்கள் இலங்கை குற்றப்புலனாய்வாளர்களினால்
கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பதற்கான சந்தர்ப்பம் உள்ளதாகவும் அண்மைய நாட்களில்
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்த
மட்டக்களப்பைச் சேர்ந்த இரு குழந்தைகளின் தாயும் ஒரு விதவையுமான ஒரு பெண் இவ்வாறு விமான நிலையத்தில்
வைத்து குற்றப்புலனாய்வாளர்களினால் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டுள்ளார். எனவே இரு குழந்தைகளின் தாயாகிய
ஒரு பெண்ணே மனிதாபிமானமற்ற முறையில் கைது செய்யப்பட்டால் இளைஞர்களின் கதி என்னவாவது? எனவே கனடா மற்றும் அவுஸ்ரேலியாவில் இருந்து புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை இலங்கை நாடுகள் மீள் பரிசீலனை செய்து அவர்களுக்கும் புகலிடம் வழங்க நடவடிக்கை எடுக்க
வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments