Latest News

May 27, 2013

அழகிகளுடன் ஸ்ரீசாந்த்: வீடியோ காட்சியை வெளியிட்டது பொலிஸ்
by admin - 0

கிரிக்கெட் சூதாட்டத்தில் கைது செய்யப்பட்ட ஸ்ரீசாந்த் மற்றும் அங்கீத் சவான் ஆகியோர் இடைத்தரகர்களுடன் பேசிய வீடியோ காட்சியை டெல்லி பொலிஸ் வெளியிட்டுள்ளது.
கடந்த 9ம் திகதி அன்று நடந்த ராஜஸ்தான் றொயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
அன்று இரவு 9 மணி முதல் மறுநாள் அதிகாலை வரை சண்டிகரிலுள்ள நட்சத்திர ஓட்டலில் ஸ்ரீசாந்த்தும், அங்கீத் சவானும் இருந்துள்ளனர்.
அப்போது அங்குள்ள சிசிடிவி கமெராவில் இருவரும் கிரிக்கெட் சூதாட்ட தரகர் ஒருவரை சந்தித்து பேசிய காட்சிகளும், தரகரிடமிருந்து பரிசு பொருள் பெற்று கொண்ட காட்சிகளும் பதிவாகியுள்ளது.
அப்போது பெண் ஒருவரும் அவர்களுடன் இருந்ததும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோக்கள் ஸ்ரீசாந்த் மற்றும் அங்கீத் சவான் ஆகியோருக்கு எதிராக வலுவான ஆதாரமாக இருக்கும் என்று டெல்லி பொலிஸ் தெரிவித்துள்ளது.

<iframe width="560" height="315" src="http://www.youtube.com/embed/gtEwfPaHbCk" frameborder="0" allowfullscreen></iframe>
« PREV
NEXT »

No comments