யாழ்ப்பாணத்தில் இன்று காலை 6.35 மணியளவில் வீசிய புயல் காற்றால் மல்லாகம் கோணக்குளம் முகாமில் உள்ள தற்காலிக குடிசைகள் மேல் சுமார் 25 பனை மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன், இதில் 4 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இடி, மின்னலுடன் கூடிய மழையோடு வீசிய இம்மினி புயல் காற்றால் மக்கள் பெரும்
அல்லலுக்கு உள்ளாகியுள்ளனர். இதில் காயமடைந்த கோணக்குளம் முகாமைச் சேர்ந்த சூசைதாசன் சுமதி (42) மற்றும்
அவரது மகன் சுமந்தன் (13) ஆகிய இருவரும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த இடத்திற்கு விஜயம் செய்த வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.
சுகிர்தன் மற்றும் செயலாளர் ஸ்ரீ மோகன் ஆகியோர் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு உதவிகளை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் மாவை கலட்டி எனும் இடத்தில் வீடொன்றின் மீது பனைமரம் முறிந்து வீழ்ந்ததில்
சதீஸ்வரன் (43) என்பவர் காயமடைந்த நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதுடன் பனை மரங்கள் பரவலாக முறிந்து வீழ்ந்துள்ளன. மேலும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் பெரும் அசௌகரியத்துக்கு முகம்
கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments
Post a Comment