Latest News

May 18, 2013

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி வவுனியாவில் இடித்தழிப்பு
by admin - 0

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில்
உயிர் நீத்த மக்களின்
ஆண்டு நினைவாக 2010ம்
ஆண்டு மே மாதம் 16ம்
திகதி திறந்து வைக்கப்பட்ட வவுனியா சம்மளங்குளம்
நினைவுத்தூபி நேற்றிரவு இனம் தெரியாத
தமிழ்த் தேசியத்திற்கு எதிரான குழுக்களால்
இடித்தழிக்ககப்பட்டுள்ளதாக
வவுனியா நகரசபை பதில் தலைவர் எம்.எம்.ரதன்
தெரிவித்துள்ளார். சம்பவம் அறிந்த இன்று காலை நேரடியாக
அதனை வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
வினோ நோகராதலிங்கம் மற்றும் நானும்
சென்று பார்வையிட்டோம். இச்சம்பவம்
அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக
தெரிவித்தார். மேலும், போர்முடிவுற்ற பின்னர் தமிழர்களின்
தாயகத்தில் நினைவிடங்கள் தூபிகள்
இடித்தழிக்கப்பட்ட தொடர்ச்சியின்
முல்லிவாய்க்களில் உயிர் நீத்த மக்களின்
நினைவுதினம் கொண்டாட இருக்கும் சூழ்
நிலையில் இச் சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். இதில் சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்திற்கு முன்நிறுத்தப்பட வேண்டும் என
வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.




« PREV
NEXT »

No comments