Latest News

May 06, 2013

முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுத்த ஒரே காரணத்திற்காகவே அசாத் சாலி கைது!- என்.கே.றம்ழான்
by admin - 0

முஸ்லிம் சமூகத்திற்காக
குரல் கொடுத்த
ஒரே காரணத்திற்காகவே அசாத்
சாலி பயங்கரவாத தடுப்புச்
சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக
மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால்
உறுப்பினர் என்.கே.றம்ழான் விடுத்துள்ள
அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அண்மைக்காலமாக நாடுபூராவும் முஸ்லிம்
சமூகத்திற்கும் புனித இஸ்லாத்திற்கும்
எதிராக ஒரு சில பௌத்த இனவாத
குழுக்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட
பல்வேறு மத அடக்கு முறைக்கு கெதிராக
குரல் கொடுப்பதற்கு எவருமற்ற அனாதைச் சமூகமாக முஸ்லிம் சமூகம் இருந்தது. அப்போது தயக்கமின்றி மிகவும் துணிகரமாக
குரல் கொடுத்து முஸ்லிம்களின்
பிரச்சினையை உலகறியச் செய்ததுடன்
இனவாதிகளிலுடன் நேரடியாக
விவாதித்து முஸ்லிம் சமூகத்தின்
உரிமைக்காகவும் ஐக்கியத்துக்காகவும் உரத்துக் குரல் கொடுத்த அசாத்
சாலி கைது செய்யப்பட்டார் என்ற செய்தி இந்த
நாட்டு முஸ்லிம்களை முழுமையாக
கவளையடையச் செய்துள்ளது. குறித்த அசாத் சாலியின் கைது அரசாங்கத்தின்
மீது முஸ்லிம்கள் அற்ப சொற்பமாக
கொண்டிருந்த நம்பிக்கையையும்
தவிடு பொடியாக்கியுள்ளதோடு முஸ்லிம்
சமூகத்தின் கருத்து சுதந்திரத்திற்கு பாரிய
அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது. இன்று ஆட்சியில் அதிகமான முஸ்லிம்
தலைமைகள் அதிகாரத்துடன் இருந்த
போதிலும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக
தோற்றுவிக்கப்பட்ட பல்வேறு மத
அடக்குமறைகளுக்கு எதிராக குரல்
கொடுக்கத் தயங்கிய போது துணிவுடன் குரல் கொடுத்தவர் அசாத்
சாலி அவரது கைது விடயத்திற்கு வேறு காரண
முடியாது. இன்று அசாத் சாலி கைது செய்யப்பட்ட விடயம்
முஸ்லிம்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகின்ற
ஒரு விடயமாக காணப்படுவதோடு அதற்காக
என்ன விதமான நியாயங்களை தெரிவித்தாலும்
அதனை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்கின்ற
மனநிலையில்லை என்பதே யதார்த்தமாகும். அசாத் சாலி அவர்கள் தான் குற்றமற்றவர் என்றும்
தனது குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும்
எனவும் கோரி நோயுற்ற நிலையிலும்
உண்னாவிரதம் இருந்து வருவதானால் முஸ்லிம்
சமூகத்திற்கு மேலும்
கவலையையேற்படுத்தியுள்ளது. எனவே, முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்காக
குரல் கொடுத்த அசாத்
சாலியை விடுதலை செய்வதற்கு கட்சி,
இனமத, பேதங்களுக்கு அப்பால்
அனைத்து அரசியல் தலைமைகளும் முயற்சிக்க
வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

« PREV
NEXT »

No comments