Latest News

May 08, 2013

5 மாத 'கோமா'வில் இருந்து மீண்டார் ஈராக் அதிபர் தலாபானி
by admin - 0

டெஹ்ரான்: 5 மாதமாக கோமாவில் இருந்த ஈராக் அதிபர் ஜலால் தலாபானிக்கு சுயநினைவு திரும்பி உள்ளது. இதனால் அவர் இறந்து விட்டதாக நிலவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஈராக் நாட்டின் அதிபர் ஜலால் தலாபானிக்கு கடந்த டிசம்பர் மாதம் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, நினைவிழந்த அவர், 'கோமா' நிலைக்கு சென்று விட்டதாக பாக்தாத் ஆஸ்பத்திரியின் டாக்டர்கள் தெரிவித்தனர்.

மேல் சிகிச்சைக்காக, அவர், ஜெர்மனி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், தொடர்ந்து, 5 மாதங்களாக கோமா நிலையில் இருந்த ஜலால் தலாபானிக்கு சுயநினைவு திரும்பியுள்ளதாக ஈராக் ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

ஈராக்கின் பெரும்பான்மை இனமான குர்திஷ் இனத்தின் தனிப்பெரும் தலைவராக கருதப்பட்ட ஜலால் தலாபானி ஜெர்மனி ஆஸ்பத்திரியில் இறந்து விட்டதாகவும், உண்மையை மறைத்து அரசியல் ஆதாயத்திற்காக சிலர் நாடகம் ஆடுகிறார்கள் எனவும் வதந்திகள் நிலவியது குறிப்பிடத்தக்கது.


« PREV
NEXT »

No comments