பொலிஸ் தடையை மீறி முள்ளிவாய்க்கால் நினைவு தின பேரணி நடைபெறும்: சீமான்
பொலிஸ் தடை விதித்தாலும் திட்டமிட்டபடி கூட்டம் நடைபெறும் என்று நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியினர் கடலூரில் முள்ளிவாய்க்கால் நினைவு தின பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தினை இன்று நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
இதற்கு தடை விதிக்க கடலூர் பொலிசார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
அதில் பேரணி நடத்த நீதிமன்றம் தடை விதித்தது. இதனையடுத்து இன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெற இருந்த நிலையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கும் பொலிஸார் தடை விதித்துள்ளனர்.
இது குறித்து சீமான் தெரிவித்ததாவது,
முள்ளிவாய்க்கால் நினைவு தினமாக கடலூரில் இன்று பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம். 4 நாட்களுக்கு முன்னதாகவே இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.
இன்று காலை திடீரென பொதுக்கூட்டம் நடத்த அனுமதி இல்லை என பொலிஸார் கூறுகின்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் பொலிஸார் வழக்கு தொடர்ந்த போது, பேரணிக்கு மட்டும் நீதிமன்றம் தடை விதித்தது.
பொதுக்கூட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால் இன்று காலையில் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி இல்லை என்று பொலிஸார் கூறுகின்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுதான் நாங்கள் பொதுக்கூட்டம் நடத்துகிறோம்.
எனவே திட்டமிட்டபடி எங்களது பொதுக்கூட்டம் நடைபெறும் இவ்வாறு சீமான் கூறினார்.
No comments
Post a Comment